புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

நான்காம் தலைமுறை ஃபோர்டு எஃப்-150 பிக்அப் ட்ரக் மாடல் தற்போதைய தலைமுறை மாடலை காட்டிலும் குறிப்பிடத்தக்க வகையிலான அப்டேட்களுடன் ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை எஃப்-150 மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

ஃபோர்டு எஃப்-150 ட்ரக்கிற்கு சர்வதேச சந்தையில் போட்டியாகவுள்ள செவ்ரோலெட் மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ட்ரக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதால் இதன் புதிய தலைமுறை வெளிப்புறத்தில் பரிணாம வளர்ச்சியாக டிசைன் மாற்றங்களையும், உட்புறத்தில் கவனிக்கத்தக்க வகையிலான தொழிற்நுட்ப வசதிகளையும் ஏற்றுள்ளது.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

இந்த வகையில் புதிய எஃப்-150 மாடல் உயரமான முன்புற ஃபெண்டர்கள், பெரிய அளவிலான சக்கரங்கள், இராணுவம் தரத்தில் அலுமினியத்தாலான உடற் அமைப்பு, C-வடிவிலான லைட்டிங் உடன் ரீடிசைனில் ஹெட்லேம்ப்கள் மற்றும் பவர் டோம் ஹூட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

இவற்றுடன் 11 விதமான முன்புற க்ரில் தேர்வை பெற்றுள்ள இந்த 2021 மாடலில் வாகனத்தை முடிந்த வரையில் பாதுகாக்கும் வகையில் பம்பர்கள், ஆக்டிவ் க்ரில் ஷட்டர்கள், ஆட்டோமேட்டிக் ஆக்டிவ் ஏர் டேம், ரீஸ்டைலில் டெயில்கேட், புதிய டிசைனில் கேப் போன்றவையும் உள்ளன.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

உட்புற கேபின், இரட்டை அனலாக் அளவீடுகளை கொண்ட 4-இன்ச் டிஜிட்டல் பாதையை காட்டும் க்ளஸ்ட்டர் உடன் காட்சியளிக்கிறது. இதன் டாப் வேரியண்ட்களில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் பெரிய 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் அல்லது 12-இன்ச் தொடுத்திரை என்ற தேர்வை பெற முடியும்.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

அமெரிக்க சந்தையில் தயாரிப்பு வாகனங்களில் நிலையாக வழங்கப்படுகின்ற ஒடிஆர் அப்டேட்களை பெறும் முதல் முழு-அளவு பிக்அப் ட்ரக் மாடலாக 2021 ஃபோர்டு எஃப்-150 விளங்கவுள்ளது. ஃபோர்டு SNYC 4 தொழிற்நுட்பத்தை தவிர இந்த அப்டேட்களின் மூலமாக ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஃபோர்டு+ அலெக்ஸா போன்ற இணைப்பு வசதிகளை பெற முடியும்.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

மைய கன்சோலிற்கு மேற்புறத்தில் ஓட்டுனர் தேவைப்பட்டால் படுத்து உறங்கும் அளவிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் கிங் ரேஞ்ச், பிளாட்டினம் மற்றும் லிமிடேட் மாடல்களில் நன்கு சாய்ந்து அமரும்படியான 180-கோண இருக்கைகள் பொருத்தப்படவுள்ளன.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

இவை மட்டுமின்றி எட்டு ஸ்பீக்கர்கள் உடன் B&O சவுண்ட் சிஸ்டம் அல்லது எச்டி ரேடியோ உடன் 18-இன்ச் ஸ்பீக்கர் B&O சவுண்ட் சிஸ்டம் போன்றவற்றையும் கூடுதல் தேர்வாக வாடிக்கையாளர்கள் பெற முடியும். புதிய எஃப்-150 மாடலின் ஆரம்ப நிலை ட்ரிம்-ஆன எக்ஸ்எல்-ல் இருந்து டாப் லிமிடேட் ட்ரிம் வரை அனைத்திலும் புதிய 3.5 லிட்டர் பவர்பூஸ்ட் ஹைப்ரீட் வி6 என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

இதன் உடன் இணைக்கப்பட்டுள்ள 47 பிஎச்பி எலக்ட்ரிக் மோட்டரின் லித்தியம்-இரும்பு பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் வழங்கப்பட்டுள்ளதால் 2021 எஃப்-150 ட்ரக்கை முழு டேங்கில் 700 மைல்கள் (1,126 கிமீ) வரையில் இயக்க முடியும். இதன் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 10-ஸ்பீடு செலக்ட்ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய வி6 ஹைப்ரீட் என்ஜினை பெற்ற 2021 ஃபோர்டு எஃப்-150 ட்ரக்... முழு டேங்கில் 1,126 கிமீ பயணிக்கலாம்

பாதுகாப்பு அம்சங்களாக ஆட்டோமேட்டிக் அவசரகால ப்ரேக்கிங் & பாதசாரிகள் அடையாளப்படுத்தும் தொழிற்நுட்பங்களுடன் ஃபோர்டு கோ-பைலட்360 2.0 செயல்படுத்தும் வாகனம் முன்புறமாக மோதுவதை தடுக்கும் வசதி, டைனாமிக் ஹிட்ச் அசிஸ்ட் உடன் பின்புறம் பார்க்கும் கேமிரா, ஆட்டோ ஆன்/ஆஃப் உடன் ஹை-பீம் ஹெட்லேம்ப்கள், ஹேண்ட்ஸ்-ப்ரீ ட்ரைவிங் உடன் ஆக்டிவ் ட்ரைவர் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
New-Gen 2021 Ford F-150 Revealed With V6 Hybrid Engine & New Tech
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X