2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

2021ல் வரிசையாக தனது தயாரிப்புகளை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் முதலாவதாக இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 கார் வரவுள்ளது.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

அதனை தொடர்ந்து அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவை 2020ன் இரண்டாம் பாதியில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. மஹிந்திராவின் பொலேரோ மற்றும் ஸ்கார்பியோ மாடல்கள் நீண்ட வருடங்களாக கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

பிரிவில் போட்டிகள் அதிகரித்து வருவதால் ஸ்கார்பியோவில் அப்கிரேட்-ஐ கொண்டுவர வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மஹிந்திரா உள்ளது. இந்த நிலையில் 2021 ஸ்கார்பியோ கோயம்புத்தூரில் டீம்பிஎச்பி செய்திதளத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

இந்த சோதனை காரில் 17 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை வைத்துதான் இது விலை குறைவான வேரியண்ட் என்பதை நாங்கள் கூறுகின்றோம். மேலும் ஸ்பை படங்கள் லெதர் இருக்கைகளுடன் கருப்பு & பழுப்பு என்ற இரட்டை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள காரின் உட்புற கேபினையும் வெளிக்காட்டுகின்றன.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

முன்பக்க இருக்கைகள் தலைபகுதியில் தலையணையையும் கொண்டுள்ளன. இருக்கைகள் தற்போதைய வெர்சனை காட்டிலும் பயணியின் உடலை இறுக்கும் விதத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், பின் இருக்கை வரிசை பாட்டில்கள் வைப்பதற்கான ஹோல்டரை மத்தியில் கொண்டிருக்கவில்லை.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

இருப்பினும் ஒட்டு மொத்தமாக கேபின் தற்சமயம் விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ உடன் ஒப்பிடுகையில் பல படிகள் முன்னேறியுள்ளது. இந்த படங்களில் கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், இரட்டை-பேட் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏசி கண்ட்ரோலிற்கு வட்ட வடிவிலான டயல்கள் மற்றும் பியானோ கருப்பு நிறத்தில் 6-ஸ்பீடு கியர் மாற்றி உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிகிறது.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

இது 7 இருக்கைகளை கொண்ட கார் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறினாலும், இந்த சோதனை காரில் இரண்டாவது வரிசையை பார்க்க முடியவில்லை. இசட்101 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் 2021 ஸ்கார்பியோ, புதிய ஏணி-ஃப்ரேம் சேசிஸை அடித்தளமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

இந்த 2021 மாடலில் மஹிந்திரா நிறுவனம் அதிகப்பட்சமாக 155 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மஹிந்திரா ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட் இப்படிதான் இருக்கும்!! ஸ்பை வீடியோ வெளியீடு

அதேநேரம் 2020 தாரில் வழங்கப்பட்டுள்ள புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் புதிய தலைமுறை ஸ்கார்பியோவில் வேறுப்பட்ட ட்யுனில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. உட்புறத்தை விசாலமாக கொடுப்பதற்காக காரின் பரிமாண அளவுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra Scorpio Sting Low-Spec Variant Spied Revealing Details
Story first published: Monday, December 21, 2020, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X