இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

அறிமுகத்தை நெருங்கி கொண்டுவரும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் சோதனை மாதிரி கார் ஒன்று கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் முழுவதையும் நிறைவு செய்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 இந்திய சாலைகளில் பலமுறை சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றின் மூலம் காரை பற்றிய தகவல்கள் எதையும் பெரிய அளவில் அறிய முடியவில்லை.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

ஆனால் தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களில் சோதனை எக்ஸ்யூவி500 கார் அனைத்து தயாரிப்பு பணிகளையும் நிறைவு செய்த நிலையில் உள்ளது. இதனால் இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

தமிழ்நாட்டு பதிவெண் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனையில், கார் முன்பக்கத்தில் விற்பனை மாடலுக்கு உண்டான பேனல்களுடன் உள்ளது. இது ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், க்ரில் மற்றும் பம்பரின் வடிவத்தையும் அளவையும் எந்த அளவில் எதிர்பார்க்கலாம் என்ற ஒரு ஐடியாவை நமக்கு வழங்குகின்றன.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

இம்முறை சோதனையிலும் தற்காலிகமான விளக்குகளை தான் சோதனை கார் பெற்றிருந்தாலும், ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்ட குழியின் பூமாரங் டிசைன் மஹிந்திராவின் எதிர்கால கார்கள் இவ்வாறான டிசைனைதான் பெற்றுவரும் என்பதை நமக்கு சொல்வதுபோல் உள்ளது.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

ஏழு-ஸ்லாட்களை கொண்ட க்ரில் அமைப்பானது முன்பை விட பெரியதாகவும், கம்பீரமானதாகவும் காட்சியளிக்கிறது. ஆனால் பம்பரின் டிசைன் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. பம்பரின் அமைப்பில் க்ரோம் மற்றும் சில்வர் தொடுதல்களை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்திருக்கலாம்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

அதிக வீல்பேஸ் உடன், 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் ஆனது அதன் முன்னோடி மாடல்களை காட்டிலும் நீளம் அதிகம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் உட்புற கேபினில், குறிப்பாக மூன்றாவது இருக்கை வரிசையில் கூடுதல் இட வசதியை எதிர்பார்க்கலாம்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

காரின் பின்புற பகுதி பெரும்பான்மையாக விற்பனையில் உள்ள மாடலை ஒத்திருக்கவே வாய்ப்புள்ளது. உட்புற கேபின் நேர்த்தியான டிசைனில் டேஸ்போர்டு, அகலமான தொடுத்திரை, தட்டையான அடிப்பகுதி கொண்ட ஸ்டேரிங் சக்கரம் மற்றும் அசத்தலான வடிவத்தில் முன் இருக்கைகளுடன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

இந்தியாவிற்கான ஃபோர்டு சி-எஸ்யூவியின் புதிய மாடுலர் ப்ளாட்ஃபாரத்தால் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 வழங்கப்படவுள்ளது. இந்த புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ல் அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

அதேபோல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் இந்த 2021 மாடலுக்கு வழங்கப்படவுள்ளன. புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் மூலம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் இந்த என்ஜினை எக்ஸ்யூவி500-ல் சற்று கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் எதிர்பார்க்கலாம்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

ஆனால் தற்சமயம் விற்பனையில் உள்ள மாடலில் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படும் டீசல் என்ஜின் இந்த புதிய தலைமுறை காருக்கு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. அதேநேரம் 2021 எக்ஸ்யூவி500-ன் உயர்நிலை வேரியண்ட்கள் அனைத்து சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் பெறவுள்ளன.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500... புதிய ஸ்பை படங்கள் வெளியீடு...

முதல் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமானபோது அதற்கு போட்டியனை அளிக்க பிரபலமான கார்கள் எதுவும் அப்போதைக்கு இல்லை. ஆனால் தற்போது இதன் இரண்டாம் தலைமுறைக்கு போட்டியாக எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா கிராவிட்டாஸ் மற்றும் 7 இருக்கை ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்டவை தயாராகி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra XUV500 Front Design, Alloys in Production Spec – New Spy Shots
Story first published: Saturday, September 26, 2020, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X