பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனையின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500-ன் அறிமுகத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது பெங்களூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் கார் கிட்டத்தட்ட முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

இருப்பினும் இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் காரில் வழங்கப்பட்டுள்ள சில டிசைன் மற்றும் வசதிகளை நம்மால் அறிய முடிகிறது. குறிப்பாக முன்பக்கம் தற்போதைய மாடலில் உள்ளதை காட்டிலும் கூடுதல் எடுப்பான க்ரில் உடன் உள்ளது.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

இதனுடன் புத்துணர்ச்சியான எஸ்யூவி தோற்றத்திற்காக ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் அமைப்பை இந்த புதிய தலைமுறை கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பை படங்களில் காரின் பின்புறம் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

இந்த அகலமான பின்பக்கத்தில் புதிய டிசைனில் டெயில்லேம்ப்கள் மற்றும் ரீடிசைனில் பின்பக்க பம்பரை எதிர்பார்க்கலாம். அதேபோல் புதிய டிசைனில் வழங்கப்படவுள்ள அலாய் சக்கரங்கள் இரட்டை நிறத்தில் இருக்கலாம். மற்றப்படி மஹிந்திரா எஸ்யூவி கார்களுக்கே உண்டான சிறுத்தை அடிப்படையிலான வடிவத்தை 2021 எக்ஸ்யூவி500 இழக்கவில்லை.

எஸ்யூவியின் பொனெட் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது முன்பை விட கம்பீரமான தோற்றத்தை காரின் முன்புறத்திற்கு வழங்கும் விதத்தில் வழங்கப்படலாம். வெளிப்புறத்தை போல் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-ன் உட்புற கேபினும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

குறிப்பாக பொத்தான்களுடன் வழங்கப்படும் மைய கன்சோலை எளிமையான வடிவத்தில் எதிர்பார்க்கலாம். இதனுடன் அப்டேட்டான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் முற்றிலும் புதிய டிசைனில் டேஸ்போர்டு லேஅவுட், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் புதிய தாழ்வான-தட்டையான பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரத்தையும் 2021 எக்ஸ்யூவி500-ன் கேபின் பெற்றுவரலாம்.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

இவை மட்டுமின்றி ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் பிராண்டின் லேட்டஸ்ட் இணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தற்போதைய எலக்ட்ரிக் சன்ரூஃப்-விற்கு பதிலாக பனோராமிக் சன்ரூஃப் போன்றவற்றையும் இந்த புதிய தலைமுறை காரில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை மீண்டும் புதிய எக்ஸ்யூவி500 கார் பெற்று வர வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக 152 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

அதேநேரம் இந்த 2021 எஸ்யூவி காருக்கு 2020 தாரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜினும் புதியதாக வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிபடுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

பெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...

மஹிந்திரா எக்ஸ்யூவி500 முதன்முதலாக இந்திய சந்தையில் அறிமுகமான போது பல புதிய தொழிற்நுட்பங்களை கொண்ட எஸ்யூவி கார் என்ற அடையாளத்துடன் விற்பனையானது. இந்த நிலையை மீண்டும் புதிய தலைமுறையின் மூலம் கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra XUV500 Spotted Testing In Bangalore Ahead Of Launch: Pics & Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X