2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய இரு பெயிண்ட் அமைப்புகளுடன் 2021 சிஎல்எஸ் மாடலை அமெரிக்க சந்தைக்காக வெளியிட்டுள்ளது. இந்த 2021 பென்ஸ் காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

சிஎல்எஸ், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான தோற்றம் கொண்ட கார்களுள் ஒன்று. தற்போது இதனை மேலும் மெருக்கேற்றும் விதமாக அதன் டிசைனில் மிகவும் நுணுக்கமான அப்டேட்களை கொண்டுவந்துள்ளது. அவற்றை அறிய நீங்கள் காரை நேரில் நெருக்கமாக பார்க்க வேண்டும்.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

டிசைன் மட்டுமின்றி மோஜாவ் சில்வர் மற்றும் சர்ரஸ் சில்வர் என்ற இரு நிறத்தேர்வுகளை கருப்பு நிற அலாய் சக்கரங்களுடன் சிஎல்எஸ் மாடலுக்கு இந்நிறுவனம் வழங்கியுள்ளது. பளப்பளப்பான கருப்பு நிறத்தில் காரின் விங் மிரர்களும் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

புதிய பெயிண்ட் அமைப்பு, டைமண்ட்-மெஷ் க்ரில் மற்றும் பெரிய கர்டைன்ஸ் உடன் காரின் முன்புறத்திற்கு கூடுதலாக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது. உட்புறத்தில் கவனித்தக்க அப்டேட்டாக கோமண்ட் சிஸ்டத்திற்கு பதிலாக அப்டேட்டான எம்பக்ஸ் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

12.3 இன்ச்சில் உள்ள திரைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் வழக்கமான அம்சங்களை கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் தற்போது ப்ரேக் அசிஸ்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

புதிய க்ராஸ்-ட்ராஃபிக் செயல்பாடானது, வாகனம் எதிர்வரும் பாதைக்கு காரை திருப்பும்போது உதவும். அதேபோல் ஆக்டிவ் ஸ்பீடு லிமிட் அசிஸ்ட்-ஐ உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான ட்ரைவ் செயல்பாடுகள், வரைபட தகவல் மற்றும் ட்ராஃபிக் சைன் அசிஸ்ட் மூலமாக தகவல்களை பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

ட்ராஃபிக் சைன் அசிஸ்ட் ஆனது, சாலை வளைவுகள், வட்ட வடிவிலான சாலைகள், சுங்க சாவடிகள் மற்றும் T-நிலையங்களை பொறுத்து காரின் வேகத்தை மாற்றிக்கொள்ளும். 2021 சிஎல்எஸ் 450 மாடலில் 3.0 லிட்டர், இன்-லைன் 6-சிலிண்டர், டர்போ-சார்ஜ்டு என்ஜினை இக்யூ பூஸ்ட் உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

இந்த டர்போ-சார்ஜ்டு என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 358 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் பெற முடியும். இதே என்ஜின் அமைப்பு தான் சிஎல்எஸ் 53 ஏஎம்ஜி மாடலில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாடலில் இந்த டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 425 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் வெளியானது...

சிஎல்எஸ் 53 ஏஎம்ஜி மாடல் 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். அதுவே சிஎல்எஸ் 450 மற்றும் சிஎல்எஸ் மாடல்களுக்கு முறையே 4.8 மற்றும் 5.1 வினாடிகள் தேவைப்படுகிறது.

Most Read Articles
English summary
2021 Mercedes-Benz CLS Unveiled In USA
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X