2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகி

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக புதிய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் ஸ்கெட்ச் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகவுள்ள மெர்சிடிஸ் பென்ஸின் 2021 எஸ்-க்ளாஸ் முற்றிலும் புதிய டிசைன் மொழியில் புதிய தொழிற்நுட்பங்கள் உடன் பிரிவில் வேறெந்த காரிலும் இல்லாத சில வசதிகளையும் ஏற்றுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

இந்த 2021 மாடல் மூலமாக காரின் வடிவமைப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ள மெர்சிடிஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இறுதி டீசர் படத்தின் மூலம் காரின் வெளிப்புற லைன்களை மிகைப்படுத்தி காட்டுகிறது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

2021 எஸ்-க்ளாஸின் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப்கள் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாகவும், க்ரில் அமைப்பு வழக்கமான டிசைனில் இருந்தாலும் மாடர்ன் தொடுதல்களை ஏற்றும் உள்ளன. ஆனால் உண்மையில் காரின் முன்பக்கத்திற்கு ஸ்போர்டியான தோற்றத்தை அகலமான முன் பம்பர் தான் வழங்குகிறது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

புதிய தலைமுறை எஸ்-க்ளாஸில் கூபே வடிவிலான மேற்கூரை வழங்கப்பட்டிருப்பதையும் இந்த டீசர் வெளிக்காட்டுகிறது. பின்புறத்தில் எல்இடி டெயில்லைட்கள் தற்போதைய எஸ்-க்ளாஸில் இருப்பதை காட்டிலும் அகலமானதாகவும், கூடுதல் கோணத்திலும் இந்த 2021 காரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

இதனால் ஒட்டு மொத்தமாக தற்சமயம் விற்பனையில் உள்ள எஸ்-க்ளாஸின் பரிணாம வளர்ச்சியாக இந்த புதிய தலைமுறை விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஸ்கெட்ச் டீசர் படம் மற்றப்படி காரின் உட்புறத்தை வெளிக்காட்டவில்லை.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

ஆனால் நமக்கு இந்த 2021 மாடலின் கேபினில் 12.8 இன்ச்சில் மைய கன்சோல், 27 பொத்தான்களுக்கு மாற்றாக தொடு கண்ட்ரோல்கள், ஹீட்டிங் & கூலிங் செயல்பாடுகளுடன் இருக்கைகள் மற்றும் ஹெட்ரெஸ்ட், லேட்டஸ்ட் எம்பக்ஸ் இணைப்பு தொழிற்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருப்பது ஏற்கனவே தெரியும். `

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

மேலும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரமும் ஸ்டாண்டர்ட் வெர்சனை விட 71மிமீ கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாத்தையும் காட்டிலும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக முன் பயணிகளுடன் சேர்த்து பின் பயணிகளுக்கும் காற்றுப்பைகளை பெற்று 2021 எஸ்-க்ளாஸ் வருகிறது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

உலகின் மிக நவீன கார் ஆலை என்று கூறப்படும் ஜெர்மனியில் உள்ள ஃபேக்ட்ரி 56-ல் உருவாக்கப்படும் முதல் காராக 2021 மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் விளங்குகிறது. இதனை தொடர்ந்து மற்ற லக்சரி பென்ஸ் கார்களும் இந்த தொழிற்சாலையில் எதிர்காலத்தில் தயாரிக்கப்படவுள்ளன.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் இறுதி டீசர் படம் வெளியீடு... செப்டம்பரில் கார் விற்பனைக்கு வருகிறது...

வருகிற செப்டம்பர் 2ல் அறிமுகமாகவுள்ள இந்த மெர்சிடிஸ் தயாரிப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றப்படி ஒவ்வொரு விதமான அளவில் வீல்பேஸை பெற்றுவருமா என்பது தெரியவில்லை. வருங்காலத்தில் எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனைக்கு வரவுள்ள எஸ்-க்ளாஸின் புதிய 2021 வெர்சனில் இயக்க ஆற்றலிற்கு 4-ல் இருந்து 6 வரையிலான சிலிண்டர்களை கொண்ட ப்ளக்-இன் ஹைப்ரீட் மற்றும் வி12 என்ஜின் வழங்கப்படலாம்.

Most Read Articles

English summary
2021 Mercedes-Benz S-Class Final Teaser Released Ahead Of Global Debut In September
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X