மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

நிஸான் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ள 2021 நவரா காரை பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

பிக்-அப் ட்ரக் வாகனமான நவரா 2021ஆம் ஆண்டிற்காக விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் உபயோகப்படுத்து வகையிலான அப்டேட்களை ஏகப்பட்டத்தை ஏற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய டாப் வேரியண்ட்டையும் இந்த பிக்-அப் வாகனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

நவராவின் முன் மற்றும் பின்பக்க தோற்றம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் க்ரில் சற்று பெரியதாக, நிஸான் டைடானின் பை-எல்இடி ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இவற்றுடன் புதிய C-வடிவ எல்இடி டிஆர்எல்களையும் இந்த 2021 மாடல் பெற்றுள்ளது.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

விண்ட்ஷீல்டிற்கு முன்பாக புதிய ஷீட் மெட்டல், ரீடிசைனில் சக்கர வளைவுகள் & டெயில்கேட் மற்றும் கால் பாதங்களை சறுக்காமல் பிடித்து கொள்ளும் ட்ரே ஃபண்டர்கள் உள்ளிட்டவற்றையும் 2021 நவராவில் நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது. உட்புறத்தில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் நமது கண்களை முதலாவதாக கவர்கின்றன.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

புதிய ஸ்டேரிங் சக்கரம் ஆனது சிறிய மாற்றங்களை பெற்ற டேஸ்போர்டு உடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அப்டேட்டான யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் அவுட்லெட் உள்பட கேபினில் அதிக இடங்களில் யுஎஸ்பி துளைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8 இன்ச்சில் அப்டேட்டான தொடுத்திரை சிஸ்டம் உள்ளே உள்ளது.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் டயல்களுக்கு மத்தியில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய பெரிய திரை வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் வசதி, முன்புற மோதலை எச்சரிக்கும் வசதி, தானியங்கி அவசரகால ப்ரேக், ரிவர்ஸின்போது குறுக்கே மற்ற வாகனங்கள் வருவதை எச்சரிக்கும் தொழிற்நுட்பம் மற்றும் 360-கோண பார்க்கிங் கேமிரா போன்ற பாதுகாப்பு அம்சங்களும் ஏகப்பட்டவை 2021 நவராவில் கொடுக்கப்பட்டுள்ளன.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

இந்த பிக்-அப் வாகனத்தின் மெக்கானிக்கல் பாகங்களில்தான் தயாரிப்பு நிறுவனம் முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பு வழக்கமான காயில்-சார்ந்த செட்-ஆப்-ஆக இருந்தாலும், இதன் பின்பக்க ட்ரேவில் அதிகப்பட்சமாக 1.2 டன் வரையிலான சுமைகளை தாராளமாக ஏற்றலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

இதன் காரணமாக பின்பக்க சக்கர அச்சு வலுவானதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இயக்கத்தின்போது வாகனத்தில் இருந்து வெளிவரும் இரைச்சலும் குறைவாகவே இருக்கும். மற்றப்படி வழக்கமான 2.3 லிட்டர் 4-சிலிண்டர் இரட்டை-டர்போ டீசல் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

இந்த டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இந்த வாகனத்தின் மூலமாக 3,500 கிலோ எடை வாகனத்தை இழுத்து செல்ல முடியும்.

மொத்த திறனையும் 2021 நவரா பிக்-அப் ட்ரக்கில் இறக்கியுள்ள நிஸான்!! அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறது

2021 நவராவிற்கு புதியதாக ப்ரோ-4எக்ஸ் என்ற டாப் வேரியண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட் பார் உடன் இந்த புதிய வேரியண்ட் அட்வென்ஜெர் பிரியர்களுக்கு ஏற்றதாக வழங்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட நவராவின் விலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதன் சர்வதேச அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
2021 Nissan Navara Facelift Debuts – Rival To Isuzu D-Max V-Cross
Story first published: Friday, November 6, 2020, 23:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X