ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

இந்த ஆண்டு துவக்கத்தில் நான்காம்-தலைமுறை ஆக்டேவியா மாடலின் விஆர்எஸ் வெர்சனை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ஸ்காட் என்ற பெயரில் ஆக்டேவியா மாடலின் எஸ்டேட் வெர்சனை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆக்டேவியாவின் இந்த புதிய வெர்சனை குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலுடன் ஒப்பிடும்போது ஸ்காட் வெர்சன் B-பில்லர் வரை ஒரே டிசைனை தான் பெற்றுள்ளது. அதற்கு பிறகு தான் ஸ்லோப்பிங் ரூஃப்-ற்கு மாற்றாக ஸ்காட் வெர்சனில் பின் இருக்கை பயணிகளுக்கு கூடுதல் ஹெட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

அதேபோல் இந்த 2021 எஸ்டேட் வெர்சனின் ரூஃப் ஆனது பின்புற கதவு வரை நீண்டுள்ளது. இருப்பினும் ஸ்காட் வெர்சனின் பின்புற பகுதி வழக்கமான ஆக்டேவியா மாடலுடன் ஒத்துள்ளதால் அதே கோண எல்இடி டெயில்லேம்ப்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

அதேநேரம் இதுவரை எந்த ஸ்காட் மாடலிலும் இல்லாத வகையில் புதிய ஆக்டேவியா ஸ்காட் வெர்சனின் நீளத்தை சற்று அதிகமாக 4,703 மிமீ-ல் கொண்டுள்ளது. அதேபோல் இதன் 640 லிட்டர் பூட் ஸ்பேஸிற்கு இணையாக எந்த ஸ்காட் மாடலும் இல்லை.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

கரடு முரடான சாலைகளுக்கு ஏற்ற விதமாக ஆக்டேவியா ஸ்காட் மாடலின் உயரம் 15மிமீ கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஸ்கோடா ஆக்டேவியா ஸ்காட் காருக்கு முன் சக்கர ட்ரைவ் உள்ளமைவு கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 4-சக்கர ட்ரைவ் உள்ளமைவும் தக்க வைக்கப்பட்டுள்ளது.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

இந்த அனைத்து சக்கர ட்ரைவ் உள்ளமைவானது, 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் மற்றும் 150 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் இருக்கும். இந்த என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

இவை மட்டுமின்றி புதிய ஸ்காட் வெர்சனிற்கு 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இ-டிஇசி மில்ட்-ஹைப்ரீட் என்ஜின் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மில்ட்-ஹைப்ரீட் என்ஜின், ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் முன் சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் பெற்றுள்ளது.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

ஆக்டேவியா ஸ்காட் மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு 2.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ எவொ என்ஜின் தேர்வுகள் வழங்கபடவுள்ளன. இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் என்ஜின் 150 பிஎச்பி மற்றும் 200 பிஎச்பி என இரு விதமான ட்யூன்களில் ஆற்றலையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும்.

ஆக்டேவியா மாடலின் புதிய ஸ்காட் வெர்சனை 2021ல் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா...

இந்த என்ஜின்களுடன் ஆல்-வீல்-ட்ரைவ் உள்ளமைவு, 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்கோடா நிறுவனத்தின் உலகளவில் பிரபலமான மாடலாக விளங்கும் ஆக்டேவியா கடந்த ஆண்டில் தான் புதிய தலைமுறையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Unveils New-Generation (2021) Octavia Scout
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X