ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டா சி-எச்ஆர் ஜிஆர் ஸ்போர்ட் காரை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

தோற்றத்தில் முக்கியமான அப்கிரேட்களை பெற்றுள்ள டொயோட்டாவின் இந்த ஸ்போர்ட் கார், ஸ்போர்டியர் ட்ரைவிங்கிற்காக அப்டேட்டான சஸ்பென்ஷன் அமைப்பை ஏற்றுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

டொயோட்டா சி-எச்ஆர் க்ராஸ்ஓவர் காரின் ஸ்போர்ட் வெர்சன் முதன்முதலாக ஜப்பான் நாட்டில் அறிமுகமானது. இந்திய சந்தைக்கு இந்த கார் வருகை தருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இத்தகைய ஸ்போர்ட் கார்களின் பிரியர்கள் நமது நாட்டில் மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

ஒருவேளை சப்-காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிற்காக சி-எச்ஆர் மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அர்பன் க்ரூஸர் மூலமாக இந்த பிரிவில் டொயோட்டா நிறுவனம் நுழைந்துவிட்டது. அர்பன் க்ரூஸர், மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

என்ஜின் தேர்வில் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள சி-எச்ஆர் மாடலுக்கும் சி-எச்ஆர் ஜிஆர் ஸ்போர்ட் காருக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. அதே 1.8 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளுடன் தான் டொயோட்டாவின் இந்த ஸ்போர்ட் கார் ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்லவுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 257 பிஎச்பி பவரை பெற முடியும். இருப்பினும் ஜிஆர் ஸ்போர்ட்டில் மேம்படுத்தப்பட்ட பாடி ரோல் மற்றும் கண்ட்ரோல் கிடைக்கும். அதேபோல் புதிய டயர்கள், ஷாக் அப்சார்பர்கள் மற்றும் சிறந்த மற்றும் வேகமான எதிர்செயல்களுக்காக ட்யூன் செய்யப்பட்ட ஸ்டேரிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த ஸ்போர்ட் கார் பெற்றுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

தோற்றத்தில், காரின் ஹெட்லைட் யூனிட்கள், மூடுபனி விளக்கிற்கான குழிகள் மற்றும் முன்பக்க க்ரில் உள்ளிட்டவற்றில் கருப்பு நிறத்தை சி-எச்ஆர் ஜிஆர் ஸ்போர்ட் கொண்டுள்ளது. இதன் 19 இன்ச் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. உட்புற கேபின் அல்காண்டாரா உள்ளமைவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

ஹூட்டட் முன் இருக்கைகளுடன் அனைத்து இருக்கைகளிலும் ஜிஆர் லோகோ உள்ளது. பின்புறத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவையாகவும், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடியவைகளாகவும் உள்ளன.

ஐரோப்பிய சந்தைக்கான டொயோட்டாவின் புதிய ஸ்போர்ட் கார்!! இந்தியாவிற்கு வருமா?

கூடுதலாக 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டத்தையும் டொயோட்டா நிறுவனம் இந்த ஸ்போர்ட் காரில் வழங்கியுள்ளது. இவ்வாறு இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் அத்தனை அம்சங்களும் இந்த காரில் உள்ளன. இருப்பினும் இந்த காரின் இந்திய வருகை தொடர்ந்து காத்திருப்பில்தான் உள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota C-HR GR SPORT revealed for the European markets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X