புதுப்பொலிவுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் முதல்முறையாக இந்தோனேஷியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

கடந்த 2016ம் ஆண்டு வந்த புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா முதல்முறையாக புதுப்பொலிவுடன் சந்தைக்கு வர இருக்கிறது. 2021 மாடலாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

2021 மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் முகப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சற்றே பெரிய அளவிலான க்ரில் அமைப்பு, க்ரோம் பட்டை அரவணைப்புடன் காணப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களை சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறிய க்ரோம் பட்டை க்ரில் அமைப்பிற்குள் வந்துள்ளது. புதிய எல்இடி விளக்குகள் உள்ளன. முக்கிய மாற்றமாக, பனி விளக்குகள் அறை மாற்றப்பட்டுள்ளதுடன், பம்பர் அமைப்பு மிக வலிமையாக தோற்றத்தை பெற்றிருக்கிறது. மேலும், கருப்பு வண்ண ஏர்டேம், ஸ்கிட் பிளேட் ஆகியவையும் பம்பருடன் இயைந்து பொருந்தி நிற்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றபடி, பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. டெயில் லைட் க்ளஸ்டர்களை கருப்பு வண்ண பட்டை இணைப்பது போன்று கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் வசீகரத்தை சேர்க்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இன்டீரியர் முழுவதும் கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது. டேஷ்போர்டு அமைப்பில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. அதேநேரத்தில், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் 6 சீட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் உள்ளன. 7 சீட்டர் மாடலிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 9 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஏர் பியூரிஃபயர் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 7 ஏர்பேக்குகல், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கீ லெஸ் என்ட்ரீ, செயற்கை லெதர் உறையுடன் இருக்கைகள், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் வரும்போது 150 எச்பி பவரை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 166 எச்பி பவரை வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மதிப்புமிக்க தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has revealed refreshed version Innova Crysta MPV car for the Indonesia market. It's expected to launch in India somtime next year.
Story first published: Thursday, October 15, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X