லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

ஜப்பானில் இருந்து உலகம் முழுவதும் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் டொயோட்டா நிறுவனம் வட அமெரிக்காவில் பிரபலமான எல்சி200-தலைமுறை லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி மாடலின் லிமிடேட் ஹெரிடேஜ் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

2021ஆம் ஆண்டிற்காக வெளிவரும் இந்த புதிய லிமிடேட் எடிசன் கார் அதன் 2020மை வெர்சனின் தோற்றத்தை மூன்று இருக்கை அமைப்பு தேர்வுடன் ஒத்து காணப்பட்டாலும், சில விஷயங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எடிசன் காருக்கு புதியதாக இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

இந்த வகையில் இந்த கார் மிட்நைட் ப்ளாக் மெட்டாலிக், பனிப்புயலின் முத்து நிறம், சில்வர் மெட்டாலிக் மற்றும் க்ரே மெட்டாலிக் என்ற நான்கு நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸர் ரேஞ்ச் கார்கள் மிகவும் விரும்பப்படும் ஆஃப்-ரோடு கார்களாக உலகளவில் உள்ளன.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

இதன் புதிய 2021மை வெர்சன் அமெரிக்காவில் மூன்று வேரியண்ட்களை பெற்றுள்ளது. இதில் 4-சக்கர ட்ரைவ் பேஸ் வேரியண்ட் 85,515 டாலர்களிலும் (ரூ.65 லட்சம்), ஹெரிடேஜ் எடிசன் 87,845 டாலர்களிலும் (ரூ.67 லட்சம்) விற்பனையை ஆரம்பிக்கவுள்ளன. ஹெரிடேஜ் எடிசன் மூன்று-இருக்கை வேரியண்ட்டின் விலை இப்போதைக்கு வெளிவரவில்லை.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

லேண்ட் க்ரூஸர் மாடலின் தொடர் விற்பனை பயணத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் புதிய ஹெரிடேஜ் எடிசனை கொண்டுவரும் டொயோட்டா யுஎஸ்ஏ நிறுவனம் அடுத்த செப்டம்பர் மாதத்தில் இதன் தயாரிப்பு பணிகளை துவங்கவுள்ளது. இதனால் மிக விரைவில் அமெரிக்காவில் உள்ள டீலர்ஷிப்களில் இந்த லிமிடேட் எடிசன் காருக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகவுள்ளன.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

இந்த காரில் முக்கிய அம்சங்களாக வெண்கல நிறத்தில் 80-இன்ச் பிபிஎஸ் ஃபோர்க்டு அலுமினியம் 5-ஸ்போக் சக்கரங்கள், விண்டேஜ் "லேண்ட் க்ரூஸர்" வெளிப்புற முத்திரை, பளபளப்பான கருப்பு நிறத்தில் முன்புற க்ரில் மற்றும் நேர்த்தியான பெயிண்ட் தேர்வுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

இவை தவிர்த்து 10 காற்றுப்பைகள், ப்ளைண்ட்-ஸ்பாட் மானிடரிங், ரேடார்-அடிப்படையிலான க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் புதிய எடிசன் காருக்காக மட்டுமல்லாமல் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பொதுவாகவே நிலையாக கொண்டுள்ளது. ராக், ராக் & டர்ட், மொகுல், லூஸ் ராக் மற்றும் மண் & மணல் என்ற பல்வேறுப்பட்ட ஆஃப்ரோடு மோட்கள் இந்த எஸ்யூவி காருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

இயக்க ஆற்றலுக்கு வழக்கமான 5.7 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் தான் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிம் ட்ரான்ஸ்மிஷன் உடன் 2021மை லேண்ட் க்ரூஸர் மாடலுக்கும் கொடுக்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,600 ஆர்பிஎம்-ல் 381 பிஎச்பி பவரையும், 3,600 ஆர்பிஎம்-ல் 544 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

லேண்ட் க்ரூஸரின் தொடர் வெற்றிக்கு பெருமை சேர்த்த டொயோட்டா... புதிய லிமிடேட் எடிசன் USA-வில் அறிமுகம்

இந்த ஆற்றல் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படும். இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதியினால் லேண்ட் க்ரூஸர் மாடலின் விற்பனையை டொயோட்டா நிறுவனம் நிறுத்திவிட்டது. இருப்பினும் விரைவில் இதன் வருகை இந்தியாவில் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Land Cruiser Heritage Edition debuts with 3-row option
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X