ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

மாதிரியின் வெளியீட்டிற்கு முன்பாக ஹோண்டா சிவிக் 2022 காரின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

நம்பகத்தன்மை மற்றும் தோற்றத்தினால் ஹோண்டா சிவிக் செடான் காருக்கு உலகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கிடையில் 2022 ஹோண்டா சிவிக்கின் முன்மாதிரி அடுத்த வாரத்தில் காண்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது 2022 சிவிக்கின் முன்மாதிரி காரின் தோற்றத்தில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை விளக்கும் வெளிகாட்டும் வகையிலான டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது உலகளவில் உள்ள செடான் கார் பிரியர்களுக்கு மற்றொரு சர்ப்பிரைஸ் காத்திருப்பது மட்டும் தெளிவாக உணர முடிகிறது.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

ஹோண்டா சிவிக்கின் 11வது தலைமுறை காராக வெளிவரும் இந்த 2022 வெர்சனை தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வாறான தோற்றத்தையும், வசதிகளையும் எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்து ஹோண்டா நிறுவனம் வடிவமைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

இதனையும் கோண வடிவமைப்பு மொழியுடன் கார் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள காரின் படங்கள் உறுதி செய்கின்றன. இந்த படங்களில் 2022 சிவிக்-இன் முன்மாதிரி வெர்சன், க்ரோம் ஹோண்டாவின் லோகோவுடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் க்ரில்லை கொண்டுள்ளது.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

சக்கரங்களும் அதே கருப்பு நிறத்தில் உள்ளன. முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் எல்இடி விளக்குகள் தடிமனான வடிவத்தில் இருந்தாலும், பார்க்க ஸ்டைலிஷாக உள்ளன. காரின் பக்கவாட்டு பகுதிகளில் தடிமனான கேரக்டர் லைன்கள் செல்கின்றன.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

இந்த படங்களில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் நிச்சயம் அடுத்த வாரத்தில் காண்பிக்கப்படவுள்ள இதன் முன்மாதிரியில் எதிர்பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் 2022 சிவிக்கின் தயாரிப்பு வெர்சனில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

மற்றப்படி இந்த 2022 மாடலில் வழங்கப்படவுள்ள என்ஜின் குறித்த எந்த விபரமும் தற்போது கிடைக்க பெறவில்லை. நமக்கு கிடைத்து தகவல்களின்படி 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்கள் வெவ்வேறு விதமான ட்யூன்களில் வழங்கப்படலாம்.

ஹோண்டா சிவிக் செடான் கார் பிரியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!! அடுத்த வாரத்தில் வெளியாகிறது

வழக்கமான மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் சந்தைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் ஹோண்டா நிறுவனம் 2022 சிவிக்கில் வழங்கலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், தற்சமயம் விற்பனையில் இருக்கும் சிவிக் காரை காட்டிலும் விற்பனைக்கு வரும் இதன் 2022 வெர்சன் நிச்சயம் பல அடுக்குகள் முன்னேறி இருக்கும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Civic 2022 teased ahead of prototype reveal. And it may be a visual treat
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X