அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3அட்டகாசமான கார்கள்... இந்தியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு

2021ம் ஆண்டின் முதல் வாரத்தை அசரடிக்கின்ற வகையில் மூன்று புதிய கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அக்கார்கள் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில், புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம், அதாவது, 2021 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாக இருக்கும் கார்களைப் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

ஆடி ஏ4 (புதுப்பிக்கப்பட்ட மாடல்)

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஏ4 செடான் ரக காரைதான் புதுப்பிக்கப்பட்ட காராக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஆடி நிறுவனம். இக்கார் வரும் 5ம் தேதி விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் கார்களில் இதுவும் ஒன்று.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

அறிமுகத்தை முன்னிட்டு ஆடி கார் விற்பனையாளர்கள் ஏ4 மாடலுக்கான புக்கிங்கைத் தொடங்கியிருக்கின்றனர். இதன்படி ரூ. 2 லட்சம் முன்தொகையில் புக்கிங் நடைபெற்று வருகின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு புதிய அணிகலன்களை ஆடி ஏ4 பெற்றிருக்கின்றது.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

அகலமான வெளிப்புற தோற்றம், ஒற்றை ஃபிரேமிலான க்ரில், புதிய வடிவத்திலான டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப் போன்ற பல்வேறு ஸ்பெஷல் அணிகலன்களை அது பெற்றிருக்கின்றது. இத்துடன், 10.1 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் ஆடி இக்காரில் சேர்த்திருக்கின்றது. தொடர்ந்து, 190 பிஎச்பி திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினே ஆடி ஏ4 மாடலில் இடம்பெற்றிருக்கின்றது.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

டொயோட்டா ஃபார்ச்சூனர் (புதுப்பிக்கப்பட்ட மாடல்)

டொயோட்டா நிறுவனமும் அதன் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் கார் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இக்கார் ஜனவரி 6ம் தேதி அறிமுகமாக உள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனரைக் காட்டிலும் அதிக ஸ்போர்ட்டியான லுக்கிலும், கூடுதல் பிரீமியம் வசதிகளுடனும் புதிதாக ஃபார்ச்சூனர் லெஜன்டர் எனும் மாடலையும் டொயோட்டா களமிறக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

புதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவிருக்கும் ஃபார்ச்சூனர் காரில் பல்வேறு சிறப்பு வசதிகளை டொயோட்டா சேர்த்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பம்பர், புதிய வடிவத்திலான எல்இடி மின்விளக்குகள் கொண்ட ஹெட்லேம்ப், மெல்லிய அலாய் வீல்கள், கூடுதல் சிறப்பு வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க சிறப்பு வசதிகளை டொயோட்டா சேர்த்திருக்கின்றன.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 8.0 இன்சிலானதாகும். இத்துடன், இக்காரில் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 204 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இத்துடன், 166 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினும் இதில் கிடைக்க இருக்கின்றது.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

ஜீப் காம்பஸ் (புதுப்பிக்கப்பட்ட மாடல்)

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், அதன் காம்பஸ் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே இந்தியாவில் அடுத்த வருடத்திற்கான முதல் காராக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்கார் ஜனவரி 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு புதுப்பித்தல்களுடன் இக்கார் இந்தியாவின் சொகுசு கார் சந்தையை ஒரு கைப் பார்க்க வரவிருக்கின்றது.

அடுத்த வார அறிமுகத்திற்கு தயாராக காத்திருக்கும் 3 அட்டகாசமான கார்கள்... கார் பிரியர்களுக்கு செம வேட்டை காத்திருக்கு!

புதிய க்ரில், ஹெட்லேம்ப், பம்பர், பனி விளக்கு, 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் யு கன்னெக்ட் சிறப்பு தொழில்நுட்ப வசதி என பல பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார் இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

Most Read Articles

English summary
3 New Cars That Will Be Unveiled Next Week. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X