35ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்! பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர்..!

35 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கன்டிஷனில் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் தோற்றமளிக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் அம்பாஸ்டர் காரும் ஒன்று. இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை என்றாலும், இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்போதும் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. குறிப்பாக, வட மாநிலங்களில் அதிகளவில் இக்கார்களை காண முடிகின்றது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்ற கார் இது என்பதனாலயே தற்போதும் நம்மால் அம்பாஸ்டரை சாலைகளில் பார்க்க முடிகின்றது. ஆனால், இக்காரின் உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தையும் ஹிந்துஸ்தான் முடக்கி பல ஆண்டுகளாவது குறிப்பிடத்தகுந்தது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

இந்நிலையில், 35 ஆண்டுகள் பழைய ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் தற்போதும் புது பொலிவுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோவை தஜிஸ் பி எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. தற்போது புத்துயிரைப் பெற்றிருக்கும் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் 1986 மாடல் என கூறப்படுகின்றது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

பல ஆண்டுகள் ஆன பின்னரும் அக்கார் தற்போதும் ஷோ-ரூம் கன்டிஷனில் காட்சியளிக்கின்றது. இதற்கு வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் செய்த புதுப்பித்தல் பணியே காரணமாக அமைந்திருக்கின்றது. ஆம், மாடிஃபிகேஷன் மற்றும் கஸ்டமைசேஷன் ஆகியவற்றின் மூலமாகவே அம்பாஸ்டர் புத்தம் புதிய வாகனமாக மாறியிருக்கின்றது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

புதுப்பித்தலின் அடிப்படையில் புதிய பெயிண்டிங் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதி சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளாஸ் கருப்பு நிறமே புத்துயிர்ப்பிற்காக அம்பாஸ்டர் காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே அம்பாஸ்டர் காருக்கு புதிய கார் தோற்றத்தை வழங்க முக்கிய காரணமாக இருக்கின்றது. அதாவது, ஷோரூம் லுக்கை வழங்குவதில் புதிய பெயிண்டிங்கே முதன்மையான காரணியாக உள்ளது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

இதுதவிர மேலும் பல அம்சங்கள் இக்காரைப் புதியதுபோல் காண்பிப்பதற்காக அதன் தற்போதைய உரிமையாளர் சேர்த்திருக்கின்றார். 15 இன்ச் அளவுள்ள வீல் ரிம், பின் பக்கத்தைக் காண உதவும் கண்ணாடிகள், டூர் ஹேண்டில்கள், பனி மின் விளக்குகள், பம்பர் உள்ளிட்டவை புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வசதியாக பார்க்கிங் சென்சார்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, காரின் உட்பகுதியிலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அது, லக்சூரி வசதியை மேம்படுத்தும் வகையில் செய்யப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, பழைய வழக்கமான ஸ்டியரிங் வீல் நீக்கப்பட்டு தற்போது புதிய பவர் ஸ்டியரிங் வீல் சேர்க்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

இந்த ஸ்டியரிங் வீல் ஹூண்டாய் காருடையது என கூறப்படுகின்றது. இதேபோன்று, தற்போது மாற்றப்பட்டிருக்கும் டேஷ்போர்டு ஸ்கோடா கார்களில் இருந்து பெறப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும்பாலான பாகங்கள் வெவ்வேறு நிறுவனத்தின் வாகனங்களில் இருந்து பெறப்பட்டே பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஏன், எஞ்ஜினும்கூட வேறொரு வாகனத்தில் இருந்து பெறப்பட்டே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், தற்போது அம்பாஸ்டர் காரில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜின் டொயோட்டா நிறுவனத்துடையது என கூறப்படுகின்றது. இது, 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டது. தொடர்ந்து, குவாலிஸிடம் இருந்து ஃபில்டரையும், டாடா சுமோவிடம் இருந்து ரேடியேட்டரையும் பெற்று இக்காரில் பொருத்தப்பட்டுள்ளது.

35 ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன்... பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர் கார்... வீடியோ!

ஆகையால், ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் பிற நிறுவனங்களின் கலவையாக மாறியிருக்கின்றது. இவற்றின் மூலமே இக்கார் தற்போது புத்துயிரைப் பெற்றிருக்கின்றது. ஹிந்துஸ்தான் நிறுவனம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்தியாவில் நிறுத்தியதன் காரணத்தினால், அதற்கு தேவையான பாகங்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவேதான் அம்பாஸ்டர் காருக்கு தேவையான பாகங்கள் பிற கார்கள் மற்றும் வெளிச் சந்தையில் இருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
35 Year Old Hindustan Ambassador Restored With Toyota Engine. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X