Just In
- 51 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பென்ஸ் காரில் இருப்பதை போன்ற வசதியுடன் விற்பனைக்கு வரப்போகும் மஹிந்திரா கார்... அப்படி என்ன வசதினு தெரியுமா?
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தம் புதிய மாடல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டிசைன்
முதன் முதலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறுத்தையை மனதில் வைத்து இந்த டிசைனை உருவாக்கியதாக மஹிந்திரா நிறுவனம் கூறியது. எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் தற்போதைய தலைமுறை மாடலை போலவே, புதிய தலைமுறை மாடலின் டிசைனும் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக புதிய தலைமுறை மாடலின் பானெட் மற்றும் க்ரில் அமைப்பு பலரையும் கவரலாம். எல்இடி டிஆர்எல்கள் உடன் 'C' வடிவ எல்இடி ஹெட்லேம்ப்களை மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட டைமண்ட்-கட் அலாய் வீல்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகள்
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஏராளமான சிறந்த வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், டிரைவிங் மோடுகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கிடைமட்டமாக வழங்கப்படவுள்ள 2 திரைகள்தான் கேபினின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிங்கிள் பேனல் போல காட்சியளிக்கும் வகையில் டிசைன் செய்யப்படவுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் இது போன்ற டிசைனை நாம் பார்க்க முடியும்.

இதில், இடது பக்க திரை ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாக செயல்படும். அதே சமயம் வலது பக்க திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டராக செயல்படும். ஆனால் விலை உயர்ந்த வேரியண்ட்களில் மட்டுமே இதுபோன்ற வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. விலை குறைந்த வேரியண்ட்களில், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உடன் வழக்கமான டயல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்ஜின்கள்
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில், 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் தேர்வும், 2.0 லிட்டர் mStallion பெட்ரோல் இன்ஜின் தேர்வும் என இரண்டு புதிய இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 185 பிஎஸ் பவரையும், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 190 பிஎஸ் பவரையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகள் உடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பரிமாணங்கள்
தற்போதைய தலைமுறை மாடலை விட புதிய தலைமுறை மாடல் நீளமானதாகவும், அகலமானதாகவும் இருக்கலாம். எனவே கேபின் நல்ல இடவசதியுடம் இருக்கும். அத்துடன் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் வீல் பேஸ் நீளம் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் சொகுசான பயணத்தை இந்த புதிய எஸ்யூவி உறுதி செய்யும்.

பின் இருக்கை பயணிகளுக்கும் சௌகரியமான பயணம்
எஸ்யூவிக்களை பொறுத்தவரையில் பின் இருக்கைகள் பயணிகளுக்கு மிக உயரிய சௌகரியத்தை வழங்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியிலும் கூட அந்த பிரச்னை இருக்கிறது. பாடி ரோல் காரணமாக பின் பக்க பயணிகள் அசௌகரியத்தை சந்திக்கும் நிலை காணப்படுகிறது.

ஆனால் இம்முறை பின் பக்க பயணிகளுக்கும் மிகவும் சௌகரியமான பயணம் கிடைக்க வேண்டும் என்பதில் மஹிந்திரா இன்ஜினியர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பின் பக்க பயணிகளுக்கும் சௌகரியமான பயணம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் டாடா கிராவிட்டாஸ் மற்றும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார்களுடன் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 போட்டியிடும்.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டின் விலை 14 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 22 லட்ச ரூபாய் என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.