ஒருமுறை கூட ப்ரேக்டவுன் ஆனதில்லை, 77 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கார்

சுமார் 77 வருடங்களாக தற்போதும் பயன்படுத்தக்கூடிய தன்மையில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒருமுறை கூட ப்ரேக்டவுன் ஆனதில்லை, 77 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கார்

நாம் இந்த செய்தியில் பார்க்கப்போவது, 1928ஆம் ஆண்டில் விற்பனையில் இருந்த ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் ஐ காரை பற்றி தான். இதுவரை சுமார் 2.75 லட்ச கிமீ தூரம் இயங்கியுள்ள இந்த கார் இப்போதும் அதே புத்துணர்ச்சியான தோற்றத்தில் இருப்பதுதான் நம்மளை இன்னும் ஆச்சிரியத்திற்குள்ளாக்குகிறது.

இந்த கார் அமெரிக்கா, கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த எம்.ஆலன் ஸ்விஃப்ட் என்பவரால் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் துரதிர்ஷடவசமாக உயிருடன் இல்லை. இவரது பாதுகாப்பில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் சுமார் 77 வருடங்கள் இருந்துள்ளது. இதுதான் ஒருவர் மிக நீண்ட காலம் ரோல்ஸ் ராய்ஸ் ஒன்றை வைத்திருந்த சாதனையாக உள்ளது.

ஒருமுறை கூட ப்ரேக்டவுன் ஆனதில்லை, 77 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கார்

1903ல் பிறந்த ஆலன் ஸ்விஃப்ட் 24 வயதில் தனது முதல் காராக 1917 ஃபார்ங்கிளினை வாங்கியுள்ளார். அதன்பின் மார்மோன் கார் ஒன்றிற்கு சொந்தகாரரான ஆலனின் 26வது பிறந்தநாள் பரிசாக அவரது தந்தை இந்த ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் ஐ காரை வழங்கியுள்ளார்.

2003ல் ஆலன் ஸ்விஃப்ட் அளித்திருந்த ஒரு பேட்டியில், "யாரோ ஒருவர் ஸ்பிரிங்ஃபீல்ட் ஆலைக்குச் செல்லுமாறு எனக்கு அறிவுறுத்தியிருந்தார். நான் அதன்படி சென்று அந்த ஆலையில் பாகங்கள் தயாரிப்பதைப் பார்த்தேன். அப்போதுதான் ரோல்ஸ் ராய்ஸ் ஆலையில் பணிகள் சிறப்பாக நடக்கும் என்ற எனது கருத்து வலுவானது.

ஒருமுறை கூட ப்ரேக்டவுன் ஆனதில்லை, 77 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கார்

அவர்கள் கார்களை சோதிக்கும் அனைத்து முறைகளையும் நான் பார்த்தேன். ஒவ்வொரு இயந்திரமும் சோதிக்கப்பட்டது. என்ஜின் தயாரித்து முடிக்கப்பட்டதும், அவர்கள் அதை ஒரு கான்கிரீட் தொகுதியில் பொருத்தி, குறிப்பிட்ட நேரம் இயக்கி பார்த்தனர்" என கூறினார்.

ட்யுல்-டோன் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் ஆலன் ஸ்விஃப்ட்டின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் சேசிஸ் ப்ரூஸ்டர் & கோ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாங்கிய புதியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட ப்ரேக்டவுன் ஆகி நிற்காமல் இப்போதும் பயன்பாட்டிலும் இருக்கும் இந்த காரின் என்ஜின் 1988ல் மறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை கூட ப்ரேக்டவுன் ஆனதில்லை, 77 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கார்

தற்சமயம் இந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் ஐ காரில் இரட்டை-டர்போ 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 571 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சுமார் 2.6 டன்களில் எடையை கொண்டிருந்தாலும், 0-வில் இருந்து 100 kmph வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் எட்டிவிடும்.

ஆலன் ஸ்விஃப்ட் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை அமெரிக்காவில் ஸ்ப்ரீங்ஃபீல்டு அருங்காட்சியகம் ஒன்றிற்கு, பராமரிப்பிற்காக 1 மில்லியன் டாலர்களுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்சமயம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரின் விலை ரூ.9 கோடியில் இருந்து ரூ.11 கோடி வரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Rolls Royce Owner M.Allen Swift- 77 Years
Story first published: Monday, November 16, 2020, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X