பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. ஹூண்டாய் கோனா, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்கள் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் நிலையில், இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்கள் வரும் மாதங்களில் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகமாக உள்ளன.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

ஆனால் எலெக்ட்ரிக் கார்களை வாங்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அப்படி குழப்பம் உடையவர்களுக்காக, எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த செய்தியின் முடிவில், எலெக்ட்ரிக் கார் வாங்கும் முடிவை நீங்கள் எடுக்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

1. பராமரிப்பு செலவு குறைவு!

பராமரிப்பு செலவு குறைவு என்பதுதான், எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் உள்ள முதன்மையான நன்மை. ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட காரை நீங்கள் வாங்கினால், அதில் இயந்திர பாகங்கள் அதிகமாக இருக்கும். எனவே அவற்றை பராமரிப்பது சிக்கலானது மற்றும் பராமரிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

ஆனால் எலெக்ட்ரிக் கார்களை பராமரிப்பது எளிமையானது மற்றும் செலவும் மிகவும் குறைவாகவே ஆகும். எலெக்ட்ரிக் கார்களின் எளிமையான அமைப்பு மற்றும் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம். எனவே பராமரிப்பு செலவு குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால், உங்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றவையாக இருக்கும்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

2. இயக்குவதற்கான செலவு குறைவு!

பராமரிப்பு செலவு குறைவு என்பதை போல், எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான செலவும் மிக குறைவு. வழக்கமான ஐசி இன்ஜின் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களில் கிடைக்கும் மற்றொரு மிக முக்கியமான நன்மை இது. உதாரணத்திற்கு நாம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை எடுத்து கொள்ளலாம்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 450 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யவும். இந்த காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு ஒரு ரூபாய் கூட செலவு ஆகாது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள சூழலில், இது உண்மையிலேயே வியக்கதக்க விஷயம்தான்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

3. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி கவலையில்லை!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்து வரும் நிலையில், அரசாங்கம் அவ்வப்போது விலைகளை உயர்த்தவும் செய்கிறது. ஒரு சில சமயங்களில் பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விடுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களுக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை என்பதால், அவற்றின் விலை உயர்வை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

4. அமைதியோ அமைதி!

மிகவும் அமைதியாக செயல்படும் திறன்தான் எலெக்ட்ரிக் கார்களில் கிடைக்கும் அடுத்த நன்மை. இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. எலெக்ட்ரிக் கார்களில் ஹூட்டிற்கு அடியில் இன்ஜின் இருக்காது. எனவே எலெக்ட்ரிக் கார்கள் மிகவும் அமைதியாக இயங்குகின்றன. மின்சார கார்களில் இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் மிகவும் அமைதியாக இயங்கும் தன்மையுடையது.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

5. வீட்டிலேயே சார்ஜிங் ஸ்டேஷன்!

அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில், பெட்ரோல் பங்க்குகள் பரபரப்பாக காணப்படும். இந்த சமயங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். உங்களிடம் வழக்கமான ஐசி இன்ஜின் கார் இருந்தால், இது உங்களுக்கு தாமதத்தை ஏற்படுத்தும்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

இந்த விஷயத்தை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் கார்கள் சிறந்தவை. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களுக்கு உங்கள் வீட்டிலேயே சார்ஜ் நிரப்பி கொள்ள முடியும். 4-5 மணி நேரங்கள் சார்ஜ் செய்தால், நீங்கள் எந்த தாமதமும் இல்லாமல் நிதானமாக கிளப்பி செல்லலாம். ஆம், நீங்கள் எலெக்ட்ரிக் கார் வைத்திருந்தால், உங்கள் வீடுதான் உங்களுக்கு எரிபொருள் நிலையம்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

எனினும் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்ய நீங்கள் மறந்து விட்டால் கொஞ்சம் சிரமமாகி விடும் என்பதே இதில் இருக்கும் ஒரே ஒரு குறை. ஆனால் இதற்கும் கூட தீர்வு இருக்கிறது. 60 நிமிடங்களுக்கு உள்ளாக பேட்டரியை சார்ஜ் செய்து விடும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் உடன் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வருகின்றன.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

6. சுற்றுச்சூழலுக்கு நட்பானது!

உங்களிடம் எலெக்ட்ரிக் கார் இருந்தால், நீங்கள் நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்து வருகிறீர்கள் என அர்த்தம். இன்றைய உலகம் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டிருப்பதற்கு, பெட்ரோல், டீசல் வாகனங்களும் மிக முக்கியமான காரணம். ஆனால் எலெக்ட்ரிக் கார்களுடைய பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை போன்று, எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. எனவே சுற்றுச்சூழலையும், காற்றின் தரத்தையும் பாதுகாக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், மின்சார கார்கள்தான் உங்களுக்கு ஏற்றவை. இதன் மூலம் நமது தலைமுறையை காப்பதுடன் மட்டுமல்லாது, எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை செய்ய முடியும்.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

7. அரசாங்க சலுகைகள்!

எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவை என்பதால், அவற்றை வாங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்குவதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா? இந்த விஷயங்கள் தெரிஞ்சா உங்களுடைய முடிவு மாறிவிடும்...

எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று டெல்லி மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்கினால், மானியம் பெற முடியும் என்பதுடன், பல்வேறு சலுகைகளை பெறலாம். இதன் மூலம் எலெக்ட்ரிக் கார்களை வாங்க நீங்கள் செலவிடும் தொகையில் கணிசமான பகுதியை சேமிக்க முடியும்.

Most Read Articles

English summary
Advantages Of Buying An Electric Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X