Just In
- 6 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 8 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 9 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
உலகம் முழுக்க.. கொரோனவால் 101,396,366 பேர் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்ல... இந்த காரை வச்சிருக்கவங்க கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோங்க... வீடியோ!
பிரபல நிறுவனத்தின் காரொன்று பாதுகாப்பு திறன் பற்றிய ஆய்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஃபிரெஞ்சு நிறுவனமான ரெனால்ட் உலக நாடுகள் சிலவற்றிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்தவகையில், ஆப்பிரிக்கா நாட்டின் சந்தைக்கான க்விட் கார்களை இந்தியாவில் இருந்தே ரெனால்ட் ஏற்றுமதி செய்கின்றது.

இந்தியாவில் வைத்து ஆப்பிரிக்காவிற்காக தயாரிக்கப்பட்ட இந்த க்விட் காரே மோதல் பரிசோதனையில் தற்போது மண்ணைக் கவ்வியிருக்கின்றது. குளோபல் என்சிஏபி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

சந்தைக்கு விற்பனைக்கு வரும் புதுமுக கார்களை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தி அதுகுறித்த தகவல்களை குளோபல் என்சிஏபி வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், ரெனால்ட் க்விட் காரின் க்ராஷ் டெஸ்ட் பற்றிய தகவலை இது வெளியிட்டிருக்கின்றது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, பெரியவர்களின் பாதுகாப்பில் இரு நட்சத்திரங்களையும், குழந்தைகளின் பாதுகாப்பில் இரு நட்சத்திரங்களையும் ரெனால்ட் க்விட் கார் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, பெரியவர்களின் பாதுகாப்பில் 17க்கு 7.78 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 49க்கு 19.68 புள்ளிகளை மட்டுமே இக்கார் பெற்றிருக்கின்றது.

இந்த குறைந்த புள்ளிகளின் காரணத்தினாலயே குளோபல் என்சிஏபி இக்காருக்கு இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே வழங்கியிருக்கின்றது. இதே கார் கடந்த 2016ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மோதல் பரிசோதனையில் பூஜ்ஜியம் ஸ்டார்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில் தற்போதைய இரண்டு நட்சத்திரங்கள் வரவேற்பளிக்கும் வகையில் இருக்கின்றது. இருப்பினும், இது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கக் கூடிய ரேட்டிங் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இது ஆப்பிரிக்க சந்தைக்கான மாடல் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆப்பிரிக்கா நாட்டிற்காக தயாராகும் க்விட் கார்களில் பாதுகாப்பு வசதிக்காக இரு ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறிப்பிட்ட மேலும் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அனைத்து இருக்கைகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் வழங்கப்படாதது, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை கொடுக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களினாலயே க்விட் கார் இரு நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது.

மேலும், விபத்து போன்ற கசப்பான நேரங்களில் முன் பக்க பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததும் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், டிரைவரின் மார்பகம், தொடை மற்றும் கனுக்கால் ஆகிய பகுதிகளுக்கு மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதாக தற்போதைய பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, ஓட்டுநரின் சக பயணியின் வல தொடைப் பகுதி மற்றும் மார்பக பகுதிக்கு லேசான காயங்கள் ஏற்படக்கூடிய சூழல் நிலவுகின்றது. இதேபோன்ற காரணங்களினாலயே இக்காரின் பாதுகாப்பு தரம் தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ஆப்பிரிக்காவிற்கான காராக இருந்தாலும் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.