தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

2021 ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடந்த சில வருடங்களாக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் இருந்து வரும் ஹோண்டாவின் இந்த ஹேட்ச்பேக் கார் தாய்லாந்தில் ஏற்கனவே சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

மேலும் அங்கு தான் முதலாவதாக இந்த கார் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில்தான் தற்போது இந்த ஹோண்டா காரை பற்றிய விபரங்கள் ஹெட்லைட்மக் என்ற தாய்லாந்து செய்திதளத்தின் மூலமாக கசிந்துள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள படங்களில் கார் மிகவும் வித்தியமான பாடி லைன்கள் மற்றும் டிசைன் வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது.

முன்புறம் விற்பனையில் உள்ள ஐந்தாம் தலைமுறை ஹோண்ட சிட்டி செடான் காருடன் பெரிய அளவில் ஒத்து காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் B-பில்லர்கள் வரையில் சிட்டி செடானுக்கும் ஹேட்ச்பேக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

அலாய் சக்கரங்கள் 16 இன்ச்சில் காட்சியளிக்கின்றன. ஆனால் பின்பக்கம் புதிய எல்இடி டெயில்லைட்கள் மற்றும் பம்பருடன் ஹேட்ச்ப்பேக் தோற்றத்திற்காக முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உட்புறம் சிட்டி செடானில் இருந்து அதிகளவில் மாற்றியமைக்கப்படவில்லை.

சிட்டி செடானில் கேபின் இரட்டை-நிறத்தில் வழங்கப்படும், ஆனால் அதன் ஹேட்ச்பேக் வெர்சனில் முழு-கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வசதிகளையும் சிட்டி ஹேட்ச்பேக்கில் அதிகளவில் எதிர்பார்க்கலாம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி கொண்ட 8-இன்ச் அட்வான்ஸ்டு தொடுத்திரையை சொல்லலாம்.

தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

இதுமட்டுமின்றி சாவி இல்லா நுழைவு, வாகனத்தை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்வதற்கு அழுத்து பொத்தான், தானியங்கி ஏசி, பெடல் ஷிஃப்டர்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் இந்த ஹேட்ச்பேக் காரின் உட்புறத்தில் எதிர்பார்க்கலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், வாகன நிலைப்பாட்டு உதவி, மலை தொடருக்கான உதவி, வேகத்தை உணர்ந்து தானியங்கி கதவு பூட்டு மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்படும்.

தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

இயக்கத்திற்கு ஒரே ஒரு 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை தான் ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் கார் பெற்றுவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 122 பிஎச்பி மற்றும் 2000- 4500 ஆர்பிஎம்-ல் 173 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படும்.

தயாராகும் ஹோண்டா சிட்டி செடானின் ஹேட்ச்பேக் வெர்சன்!! இரண்டிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவுதான்...

இந்த என்ஜின் உடன் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படும். புதிய சிட்டி ஹேட்ச்பேக் தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் முதலாவதாக விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டு சந்தைகளுக்கு இந்த ஹேட்ச்பேக் காருக்கு பதிலாக புதிய ஜாஸ் ஹேட்ச்பேக்கை அறிமுகபடுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

ஜாஸ் நமது நாட்டிலும் விற்பனை செய்யப்படுவதால், அதன் புதிய தலைமுறை தான் வருமே தவிர்த்து சிட்டி ஹேட்ச்பேக் வர வாய்ப்பில்லை.

Most Read Articles

English summary
Ahead of launch new details of the 2021 Honda City hatchback have emerged
Story first published: Tuesday, November 24, 2020, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X