Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேற லெவலுக்கு போகும் இந்தியா... பட்ஜெட் கார் கூட இனி உயிரை காப்பாற்றும்... எப்படினு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க
இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்கள் கூட இனி பாதுகாப்பானவையாக மாறப்போகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் தோராயமாக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, தரமற்ற சாலைகள் என இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததும் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

எனவே வாகனங்களை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை மத்திய அரசு தொடர்ச்சியாக கட்டாயமாக்கி வருகிறது. ஒருவேளை விபத்து நடைபெறும் பட்சத்தில், பயணிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரிக்கப்படுகிறது.

இந்த வரிசையில் பட்ஜெட் மாடல்கள் உள்பட அனைத்து கார்களிலும், முன் பக்க பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் வழங்குவதை மத்திய அரசு கூடிய விரைவில் கட்டாயமாக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் அனைத்து கார்களிலும் ஓட்டுனர் இருக்கைக்கு ஏர்பேக் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. இதன்படி அனைத்து கார்களிலும் குறைந்தபட்சம் ஓட்டுனர் இருக்கைக்கு ஒரு ஏர்பேக்கை வாகன உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயமாக வழங்கியாக வேண்டும். ஆனால் குறைந்தபட்சம் ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை போதுமானதாக இல்லை.

ஏனெனில் விபத்து நிகழும் பட்சத்தில், முன் பக்கத்தில் ஓட்டுனரின் இருக்கைக்கு அருகே கோ-பாசஞ்சர் இருக்கையில் அமர்ந்திருக்க கூடிய பயணிக்கு படுகாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சில சமயங்களில் அவர்கள் விபத்தில் மரணமடைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான் முன் இருக்கை பயணியின் பக்கத்திற்கும் ஏர் பேக் வழங்குவதை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''விபத்து ஏற்படும்பட்சத்தில், பயணிகளை பாதுகாப்பதற்கு அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளை வாகனங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்பு கொண்டுள்ளனர்.

விலையை மனதில் வைத்து கொண்டு, பாதுகாப்பு வசதிகளில் எந்தவிதமான சமரத்தையும் செய்து கொள்ள கூடாது என்பதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம்'' என்றனர். முன் பக்க பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற புதிய விதிமுறையை எப்போதில் இருந்து கட்டாயமாக்குவது? என்பது குறித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் தற்போது ஆலோசனை செய்து வருகிறது.

இந்த புதிய விதிமுறைக்கு இணங்குவதற்கு ஒரு வருடம் போதுமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஒரு வருடம் கழித்து, இந்த புதிய விதிமுறை கட்டாயமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் பக்க பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டால், புதிய கார்களின் விலை சற்று உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் விலையை விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அத்துடன் ஏர்பேக் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் கார்களில் இடம்பெறுவதை மத்திய அரசும் தொடர்ச்சியாக கட்டாயமாக்கி கொண்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் தற்போது பாதுகாப்பானவையாக மாறி வருகின்றன. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள், மத்திய அரசு காட்டும் கெடுபிடிகளுக்காக மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலேயே பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இதன் காரணமாக டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன. உச்சகட்ட பாதுகாப்பை வழங்குவதால், இந்த கார்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.