ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

அறிமுகத்திற்கு முன்னதாக புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

உலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அடுத்ததாக இந்திய சந்தையில் புதிய 2 சீரிஸ் க்ரான் கூபே காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ கார் ஸ்போர்ட் லைன் & எம் ஸ்போர்ட் என்ற இரு விதமான ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

இதற்கு முன்னதாக தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் எலைட் கார் க்ளப் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் கார் மிசானோ நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

அதேபோல் இந்த படங்களின் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடையாள கிட்னி வடிவிலான பெரிய க்ரில், இரட்டை நிறங்களில் அலாய் சக்கரங்கள், ஸ்விஃப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவற்றை புதிய 2 சீரிஸ் க்ரான் கூபே பெற்றுள்ளதையும் பார்க்க முடிகிறது.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

இரட்டை நிறங்களில் உட்புற கேபினை பெற்று வரும் இந்த கூபே காரில் ஃப்ரேம் இல்லா கதவுகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கை அமைப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

தற்போது ஷோரூம்களுக்கு வந்தடைந்து இருப்பது புதிய 2 சிரீஸ் க்ரான் கூபேவின் 220டி ட்ரிம் என்பது காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள முத்திரையின் மூலம் அறிந்திருப்பீர்கள். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. மேலும் இந்த பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் வேரியண்ட் தேர்வும் வழங்கப்படவுள்ளது.

ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..

இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 189 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 15ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காருக்கான முன்பதிவுகள் தற்சமயம் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன.

Most Read Articles
English summary
BMW 2 Series Gran Coupe arrives at dealerships ahead of launch
Story first published: Saturday, October 10, 2020, 23:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X