ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... எலெக்ட்ரிக் மோடில் வைத்து ஆபிஸ் போயிட்டு வந்துடலாம்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் அசத்தும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் நிச்சயமாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய சிட்டி கார் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

கடந்த ஆண்டு தாய்லாந்தில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அண்மையில் இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கும் இந்த கார் இந்தியர்களின் அந்தஸ்தையும் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

இந்த நிலையில், இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு தவிர்த்து, ஹைப்ரிட் எனப்படும் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார்கள் கொண்ட தேர்விலும் வந்துள்ளது.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவில் மாருதி, எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் பெட்ரோல் ஹைப்ரிட் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அவற்றில் உள்ள இன்டகிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர், பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமாக இருக்கிறது. அதாவது, மின் மோட்டாரில் மட்டும் செல்வதற்கான திறன் கிடையாது.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

ஆனால், புதிய ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்பட்டுள்ள e:HEV என்று குறிப்பிடப்படும் இந்த ஹைப்ரிட் மாடலானது அதிக திறன் வாய்ந்ததாக இருக்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படும் என்பதுடன், தனியாகவும் மின் மோட்டாரில் மட்டுமே செல்லும் என்பதும் ஆகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

அதிலும், மற்றொரு விசேஷ தொழில்நுட்ப அம்சத்தையும் இந்த கார் கொண்டுள்ளது. அதாவது, இந்த காரில் இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. இதில், ஒன்று பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படும். மற்றொரு எலெக்ட்ரிக் மோட்டார் மூலமாக பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமல் கார் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

தினசரி அலுவலகப் பயன்பாடு, நகர்ப்புறத்தில் செல்லும்போது மின் மோட்டாரில் வைத்து சென்று வரலாம். இதனால், மாசு உமிழ்வு முற்றிலுமாக குறைவதுடன், எரிபொருள் செலவையும் வெகுவாக கட்டுப்படுத்தும். நெடுஞ்சாலையில் செல்லும்போது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் துணையுடன் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 98 பிஎஸ் பவரையும், 127 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டாவது மின் மோட்டார் அதிகபட்சமாக 109 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லித்தியம் அயான் பேட்டரி மூலமாக இந்த மின் மோட்டார் இயங்குவதுடன் சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸில் மின் மோட்டார் சக்கரங்களுக்கு செலுத்தப்படும்.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... இந்தியாவுக்கு எப்போது?

நகர்ப்புறம் அல்லது நெடுஞ்சாலை பயன்பாடு என இரண்டிற்கும் இந்த புதிய ஹைப்ரிட் மாடல் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் ஹோண்டா சிட்டி ஆர்எஸ் என்ற டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் தோற்றம் மற்றும் சிறப்பு ஆக்சஸெரீகளை இந்த கார் பெற்றிருக்கும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda has revealed the new City car model with proper hybrid technology in the Malaysian market. It's expected to launch in India by mid-2021.
Story first published: Wednesday, August 26, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X