புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள புதிய கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவக்கியது. முதல் மாடலாக வந்த செல்டோஸ் எஸ்யூவிக்கு அபரிமிதமான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்தது. அதே சூட்டோடு சூடாக அடுத்து கார்னிவல் எம்பிவி காரையும் கொண்டு வந்தது. சொகுசு கார்களுக்கு இணையான அம்சங்களை கொண்ட இந்த காருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த உற்சாகத்துடன் தனது சந்தையை மேலும் வலுப்படுத்தும் விதத்தில், அடுத்து சொனெட் என்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது கியா மோட்டார் நிறுவனம்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. மினி செல்டோஸாக உருவகப்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவல் இருந்து வருகிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த சூழலில், தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் சொனெட் எஸ்யூவி வரும் ஆகஸ்ட் 7ந் தேதி இந்தியாவில் வைத்து உலக அளவில் வெளியிடப்பட உள்ளதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாடலுக்கும் விரைவில் அறிமுகமாக இருக்கும் தயாரிப்பு நிலை மாடலுக்கும் வடிவமைப்பில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்று ஏற்கனவே கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, சில முக்கிய மாற்றங்களுடன் தயாரிப்பு நிலைக்கு சொனெட் தரம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அடிப்படையிலான மாடலாக வர இருக்கிறது. வடிவமைப்பில் கியா பேட்ஜ் மற்றும் டிசைன் அம்சங்களுடன் வேறுபடும். வெனியூ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள்தான் இதிலும் வழங்கப்படும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய கியா சொனெட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே, ஐஎம்டி என்ற புதிய வகை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு சொனெட் எஸ்யூவியில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

கியா சொனெட் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுவதுடன் யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் முக்கிய வசதியாக இருக்கும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சன்ரூஃப், கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்- ஸ்டாப் வசதிகளும் இந்த காரிலும் இருக்கும்.

புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் கியா சொனெட் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியையொட்டி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு கடும் போட்டியை தரும்.

Most Read Articles

English summary
According to report, Kia is planning to unveil the all new Sonet SUV on 7th August, 2020.
Story first published: Tuesday, July 14, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X