2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எஸ்-க்ளாஸ் செடான் காரை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த செடான் காரின் உட்புற கேபின் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

முற்றிலும் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இதன் உட்புற படங்களின் மூலமாக புதிய எஸ்-க்ளாஸின் கேபின் புத்துணர்ச்சியான தோற்றத்தில் இருப்பதை அறிய முடிகிறது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

உட்புறத்தில் மொத்தம் நான்கு தொடுத்திரைகள் 2021 எஸ்-க்ளாஸ் செடான் காருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் மாத்திரை வடிவிலான 12.8 இன்ச் தொடுத்திரை சரியாக மையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 27 பொத்தான்களுக்கு மாற்றாக வழங்கப்பட்ட தொடு கண்ட்ரோல்கள் தான் புதிய தலைமுறை எஸ்-க்ளாஸின் உட்புறத்திற்கு மிகவும் ப்ரீமியம் தோற்றத்தினை வழங்குகின்றன.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

ஓட்டுனர் எதை விரும்புவர், ஹீட்டட் & கூல்டு இருக்கைகள் மற்றும் ஹெட்ரெஸ்ட். இவை அனைத்தும் இந்த 2021 மாடலில் உள்ளன. மைய ஆர்ம்ரெஸ்ட் மட்டுமின்றி கதவுகளில் உள்ள ஆர்ம்ரெஸ்ட்கள் கூட ஹீட்டட் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் ஒலி வசதிகளையும் இந்த பென்ஸ் கார் அப்கிரேட் ஆகவே பெற்றுள்ளது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

ஏனெனில் மிகவும் ப்ரீமியம் தரத்திலான பர்மிஸ்டர் சவுண்ட் சிஸ்டம் இந்த 2021 மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. எம்பக்ஸ் இணைப்பு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருவதால், புதிய எஸ்-க்ராஸில் மற்ற மெர்சிடிஸ் தயாரிப்புகளை போல ‘ஹே மெர்சிடிஸ்' குரல் கண்ட்ரோல் நிச்சயம் இருக்கும்.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

27 மொழிகளை ஏற்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃபை ஸ்லைட் செய்வது, கேட்டு கொண்டிருக்கும் பாடலை மாற்றுவது மற்றும் சத்தத்தை கண்ட்ரோல் செய்வது உள்ளிட்டவற்றை கை சைகை மூலமாகவே புரிந்து கொள்ளும்.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

இவற்றுடன் அட்வான்ஸ் வசதியாக இரு ஹெட்-அப் திரைகள், சவுகரியமான பயணத்திற்கு தேவைக்கு ஏற்றாற்போல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள் மற்றும் கேபினை சுற்றிலும் பிரகாசமான விளக்குகள், இதற்கு மேல் என்ன வேண்டும்.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் செடான் காரின் உள்ளே என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன... தெரியுமா?

இவை எல்லாத்தையும் விட முக்கியமான பாதுகாப்பு அம்சமாக பின் இருக்கை பயணிகளுக்கும் காற்றுப்பைகள் புதிய எஸ்-க்ராஸில் வழங்கப்படவுள்ளதாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. 3106மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள 2021 மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் காரின் வீல்ஸ்பேஸ் 71மிமீ கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
2021 Mercedes-Benz S-Class Interior Details Revealed
Story first published: Tuesday, August 18, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X