Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 4 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 5 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 6 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புக்கிங்கில் பட்டைய கிளப்பும் மலிவு விலை கார்... 5 நாளில் நிஸான் மேக்னைட் காருக்கு கிடைத்த புக்கிங் எவ்ளோ தெரியுமா?
நிஸான் நிறுவனத்தின் புது முக புக்கிங்கில் பட்டையை கிளப்ப ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிஸான் நிறுவனம் இந்திய சந்தையை அதகளப்படுத்துகின்ற வகையில் புதிய மலிவு விலை மேக்னைட் காரை மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது நடுக்கத்தில் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஐந்து நாட்களிலேயே அமோகமான புக்கிங்கை மேக்னைட் பெற்றிருக்கின்றது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ஒட்டுமொத்தமாக 5,000 யூனிட் மேக்னைட் கார்களுக்கான புக்கிங் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இக்கார் குறித்த விசாரணையைச் செய்திருப்பதாகவும் நிஸான் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்றே இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே இந்தியர்கள் இக்கார் அமோகமான புக்கிங்கைப் பெற்று வருகின்றது. விரைவில் புக்கிங் செய்தவர்களுக்கு இக்கார் டெலிவரி வழங்கப்பட உள்ளது. இந்த கார் கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, இந்தியாவில் விற்பனையாகும் சில ஹேட்ச்பேக் கார்களுக்கும் விலையின் அடிப்படையில் மேக்னைட் போட்டியாக அமைந்திருக்கின்றது. நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சம் ஆகும். இந்த விலையில் வருகின்ற 31ம் தேதி வரை மட்டுமே காரை வாங்க முடியும். மேலும், ஒட்டுமொத்த புக்கிங்கில் 40 சதவீத புக்கிங் ஆன்லைன் வாயிலாகவே கிடைத்திருப்பதாக நிஸான் கூறியுள்ளது.

எதிர்பார்த்திராத அளவில் புக்கிங் கிடைத்து வருவதால் நிஸான் நிறுவனம் புதிய உற்சாகத்தில் திகைத்திருக்கின்றது. எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரீமியம் மேக்னைட்டின் இந்த வேரியண்டுகளே தற்போது அதிகளவில் புக்கிங்கைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இக்கார்கள் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அக்ஷய பாத்திரமாக காட்சியளிக்கின்றன.

எனவேதான் மக்கள் இந்த வேரியண்டுகளுக்கு அதிக வரவேற்பைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதுதவிர டெக் பேக் எனும் பெயரில் கூடுதலாக சில தொழில்நுட்ப வசதிகளையும் நிஸான் வழங்குகின்றது. இதற்கு தனி கட்டணமாக ரூ. 38,698ஐ அது வசூலித்து வருகின்றது.

ஆம், காரின் அறிமுக சலுகையாக இந்த குறைந்தபட்ச விலையை நிஸான் அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் இக்காரின் ஆரம்ப விலையே ரூ. 5.59 லட்சமாக மாறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆரம்ப நிலை மாடலைக் காட்டிலும் மேக்னைட்டின் டாப் வேரியண்டுகளுக்கே விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக நிஸான் தெரிவித்திருக்கின்றது.

தற்போது கிடைத்திருக்கும் புக்கிங்கில் 60 சதவீத புக்கிங்கை இரு உயர்நிலை மாடல்களே பெற்றிருப்பதாக நிஸான் கூறியிருக்கின்றது. இதையடுத்து 30 சதவீத புக்கிங்கை சிவிடி ஆட்டோமேட்டிக் கார்கள் பெற்றிருக்கின்றன.