கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

கியா செல்டோஸ் போட்டியாக வரும் புத்தம் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்ட்டில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் பெரும் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. எனவே, இந்த மாடல்களுக்கு இருக்கும் வலுவான சந்தையை மனதில் வைத்து, புதிய மாடலை களமிறக்கும் முனைப்பில் கார் நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

குறிப்பாக, ஸ்கோடா நிறுவனம் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு நேரடி போட்டியான மாடலை மிக விரைவில் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. அதாவது, டைகுன் சப்- காம்பேக்ட் எஸ்யூவிக்கு முன்னதாகவே இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

அதாவது, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில், அதாவது ஏப்ரல்- ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கார் அண்ட் பைக் தள செய்தி தெரிவிக்கிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் மாடலின் அடிப்படையில்தான், புத்தம் புதிய ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

புதிய ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது 4,256 மிமீ நீளமும், 2671 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாறறும் வகையிலான வடிவமைப்பில், வலிமையான க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. மெல்லிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், 19 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

புதிய ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8.7 வினாடிகளில் எட்டிவிடும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். 195 கிமீ டாப்ஸ்பீடு கொண்டதாக வருகிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவியானது இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 IN என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படுகிறது.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்!

இந்த எஸ்யூவிக்கு 90 சதவீத முக்கிய பாகங்களை இந்திய சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மிக சரியான விலையில் சந்தைப்படுத்த முடியும் என்று ஸ்கோடா நம்புகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
According to a media report, Skoda is planning to launch production-spec Vision IN crossover in the second quarter of 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X