மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

விரைவில் அறிமுகமாக இருக்கும் நிஸான் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

இந்தியர்களின் ஆவலைத் தூண்டி வரும் கார்களில் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் காரும் ஒன்று. நாட்டின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தற்போது விற்பனையில் இருக்கும் கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த இக்கார் விரைவில் விற்பனைக்கு வருகை தர இருக்கின்றது. வரும் 26ம் தேதி இக்கார் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

இம்மாதிரியான சூழ்நிலையில் இந்த காரின் மைலேஜ் பற்றிய தகவல் இணையத்தின் வாயிலாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. கார்களில் இந்தியர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஷயங்கள் பல இருக்கின்றது. அதில் முதன்மையானது மைலேஜ். இதை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் ஏமாற்றம் அளிக்காது என்பது தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

அராய் (ARAI) அமைப்பு வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது வெளியிட்ட தகவலின்படி, நிஸான் மேக்னைட் கார், லிட்டர் ஒன்றிற்கு 20 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிய வருகின்றது. இது, 5 ஸ்பீடு வேக கட்டுப்பாட்டு கருவியுடன் இருக்கும் டர்போ எஞ்ஜினின் மைலேஜ் விவரம் ஆகும்.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

இதேபோன்று, சிவிடி வேக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் நிஸான் மேக்னைட் லிட்டர் ஒன்றிற்கு 17.7 கிமீ வரை மைலேஜ் தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மைலேஜ் திறன் மிகக் குறைவானது என்றோ, மிக மிக அதிகம் என்றோ கூறிவிட முடியாது. நடுத்தரமான மைலேஜாகும். மேலும், அனைவரையும் கவரக்கூடிய மைலேஜ் திறனாகவும் இது இருக்கின்றது.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

இத்தகைய மைலேஜ் திறன்களின் காரணத்தினாலயே உலக நாடுகளில் இந்த எஞ்ஜினைக் கொண்டிருக்கும் நிஸான் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. மேற்கூறிய இரு மைலேஜ் திறன்களுக்கு இடையே 1.0 லிட்டர் பி4டி நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட மேக்னைட் அமர்ந்துள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வைக் கொண்ட இது அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 18.75 கிமீ மைலேஜை வழங்கும்.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

மேலே பார்த்த அனைத்து தகவலும் அராய் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும். இந்த காரின் அனைத்து எஞ்ஜினும் பெட்ரோல் தேர்வில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. ஆகையால், மேலே பார்த்த அனைத்து தகவலும் பெட்ரோல் எஞ்ஜின்களுடையது மட்டுமே ஆகும்.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

இந்த மைலேஜ் திறன் கியா சொனெட்டின் உண்மையான போட்டியாளனாக நிஸான் மேக்னைட்டை மாற்ற இருக்கின்றது. கியா சொனெட் காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் 18.3 கி.மீட்டரில் இருந்து 17.52 கிமீ வரையிலான மைலேஜை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று, மற்றுமொரு போட்டியாளராக இருக்கும் ஹூண்டாய் வெனியூ கார் 18.2 கிமீ மைலேஜை வழங்குகின்றது. இவை வேகக்கட்டுப்பாடு கருவிகளின் படிநிலையைப் பொருத்து மாறுபடும்.

மைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...

நிஸான் மேக்னைட் கார் மைலேஜ் விவகாரத்தில் மட்டுமின்றி தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிலும் இந்தியர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஆமாங்க, இந்த காருக்கு நவீன கால தோற்றத்தையும் வசதிகளையும் நிஸான் வழங்கியிருக்கின்றது. இதேபோன்று, நாம் மேலே கூறியதைப் போல் எஞ்ஜின் தேர்விலும் பன்முக தேர்வை இக்கார் வழங்க இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Arai Reveals Nissan Magnite Mileage Figure Details. Read In Tamil.
Story first published: Thursday, November 19, 2020, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X