ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி ஏ8எல் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி கார் நிறுவனத்தின் மிக உயரிய வகை சொகுசு செடான் கார் மாடலாக ஏ8எல் கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் நான்காம் தலைமுறை மாடலாக வந்துள்ளது.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ8எல் சொகுசு காருக்கு ரூ.1.56 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 55 டிஎஃப்எஸ்ஐ என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி ஏ8எல் சொகுசு காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இரண்டு டன் எடை கொண்ட காரை இதன் எஞ்சின் மிக அசாத்தியமாக கையாள்கிறது. அதாவது, 0 - 100 கிமீ வேகத்தை இந்த எஞ்சின் 5.7 வினாடிகளில் எட்டிவிடும்.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. மேலும், இதனுடன் 10Ah லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் ஹைப்ரிட் சிஸ்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம், இந்த கார் 55 முதல் 160 கிமீ வேகத்தில் கார் செல்லும்போது 40 நிமிடங்கள் வரை பெட்ரோல் எஞ்சின் அணைந்துவிடும். இதன்மூலமாக, 100 கிலோமீட்டருக்கான எரிபொருள் செலவில் 0.7 லிட்டர் வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ8எல் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி எவோ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இந்த கார் 5,302 மிமீ நீளமும், 1,945 மிமீ அகலமும், 1,488 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த கார் 37 மிமீ கூடுதல் நீளமும், 17 மிமீ கூடுதல் உயரமும் கொண்டதாக மாற்றங்களை கண்டுள்ளது. அகலம் 4 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸ் 3,128 மிமீ ஆக இருக்கிறது. 6 மிமீ வீல் பேஸ் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 19 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ8எல் காரில் எச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், ஓஎல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் முழுமையான லைட் பார் ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ8எல் காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8.6 அங்குல திரை மூலமாக க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. இந்த காரில் பேங் அன்ட் ஒலுஃப்சென் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. 1,920W திறன் வாய்ந்த ஆடியோ சிஸ்டம் உள்ளது.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ8எல் சொகுசு காரில் 8 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் சர்ரவுண்ட் வியூ கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஏ8எல் கார் 54 விதமான வண்ணத் தேர்வுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் இன்டீரியர் வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். இந்த காருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கவிட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே மற்றும் லெக்சஸ் எல்எஸ்500எச் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Audi A8L Luxury Car Launched In India
Story first published: Monday, February 3, 2020, 19:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X