பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வேகமாக வலுப்பெற துவங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து அனைத்து கார் நிறுவனங்களும் மின்சார கார் மாடலை கொண்டு வருவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் சொகுசு ரக கார் மார்க்கெட்டில் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் மாடலாக இ.க்யூ.சி என்ற அசத்தலான மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

இந்த சூழலில், ஆடி கார் நிறுவனமும் தனது இ-ட்ரான் எலெக்ட்ரிக் சொகுசு கார் மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு தயாராகி வருகிறது.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

இதுகுறித்து ஆடி கார் நிறுவனத்தின் அதிகாரி தில்லான் கூறுகையில்,"அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம். இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் மாடலை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

எலெக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தக வாய்ப்பு குறித்து தீவிர ஆய்வுகளை செய்து வருகிறோம். சார்ஜ் ஏற்றும் வசதி, சலுகை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலனை செய்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளதார்.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உலக அளவில் சிறந்த மாடலாக பெயர் பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில், 17,461 ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மோட்டார் பொருத்தப்பட்டு, சக்கரங்களுக்கு மின் மோட்டார் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த காரில் ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

இந்த காரின் மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 360 பிஎஸ் பவரையும், 561 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். ஆட்டோமேட்டிக் பூஸ்ட் மோடில் வைக்கும்போது கூடுதலாக 48 பிஎஸ் பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனால், 0 - 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும்.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

ஆடி இ-ட்ரான் எஸ்யூவியில் 95kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு உள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றும் திறனை வழங்கும்.

மேலும், வேகத்தை பொறுத்து தரை இடைவெளியை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உண்டு. உதாரணத்திற்கு ஆஃப்ரோடு செல்லும்போது வேகம் குறைவாக இருக்கும் என்பதால், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருக்கும். வேகம் அதிகரிக்கும்போது க்ரவுண்ட் க்ளியரன்ஸ் குறைந்துவிடும்.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரில் ரியர் வியூ மிரர்களுக்கு பதிலாக கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்கதவுகளில் இருபுறமும் இருக்கும் திரைகள் மூலமாக இடது, வலதுபக்கம் வரும் வாகனங்களை இந்த திரைகள் மூலமாக பார்க்க முடியும். பெரிய அளவிலான ரியர் வியூ மிரர்கள் இல்லாததால், இதன் ஏரோடைனமிக் சிறப்பாக இருக்கும் என்று ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு தொடுதிரைகள் சாதனங்கள் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பெற முடியும். விர்ச்சுவல் காக்பிட் முறையில் தத்ரூபமான பிம்பத்தை காட்டும் வகையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி!

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஏற்கனவே இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், எலெக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தக வாய்ப்பு குறித்த நிலவிய சந்தேகத்தால், அறிமுகத்தை ஒத்தி போட்டு வருகிறது ஆடி. மேலும், கொரோனாவும் சேர்ந்து கொண்டதால், இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வந்துவிட்டதால், அடுத்த ஆண்டு நிச்சயம் தனது இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆடி விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகி இருக்கிறது.

ஆட்டோ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தள செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
According to report, Audi is planning to launch e-tron electric SUV in India by sometime next year.
Story first published: Saturday, October 17, 2020, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X