ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

ஆடி கார் நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி மாடலாக வரும் க்யூ2 எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

ஆடி கார் நிறுவனத்தின் க்யூ (Q) வரிசையில் விற்பனை செய்யப்படும் சொகுசு ரக எஸ்யூவி மாடல்களுக்கு பணக்காரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஸ்டைலான டிசைன், சொகுசு வசதிகளுடன் இந்தியாவிலும் ஆடி சொகுசு ரக எஸ்யூவிகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

இந்த நிலையில், தனது சொகுசு எஸ்யூவிகள் மீது மோகம் கொண்டிருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் புதிய சொகுசு எஸ்யூவி தேர்வை வழங்குவதற்கு ஆடி திட்டமிட்டது. இதற்காக, தனது க்யூ வரிசையில் மிக குறைவான விலை கொண்ட க்யூ-2 எஸ்யூவி மாடலை இந்தியா கொண்டு வர இருக்கிறது ஆடி கார் நிறுவனம்.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

இந்த புதிய மாடலுக்கு இன்றுமுதல் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.2 லட்சத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு அறிமுகச் சலுகையாக 5 ஆண்டுகள் சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களையும் வழங்க இருக்கிறது.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

இந்த ஆண்டு ஆடி கார் நிறுவனத்தின் ஐந்தாவது புதிய கார் மாடலாக இந்தியாவில் ஆடி க்யூ2 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆலையில் இருந்து முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 4.2 மீட்டர் நீளத்துடன் கூடிய இந்த கார் சொகுசு எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆடி கார் நிறுவனத்தின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

ஆடி க்யூ2 எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், வலிமையான தோற்றத்தை தரும் க்ரில் அமைப்பு, இன்டர்நெட் வசதியுடன் கூடிய 8.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடி கனெக்டெட் கார் செயலி, 12.3 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

 ஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

ஆடி க்யூ2 எஸ்யூவியானது பிஎம்டபிள்யூ எக்ஸ்1, வால்வோ எக்ஸ்சி40 மற்றும் ஆடி கார் நிறுவனத்தின் க்யூ3 எஸ்யூவி மாடல்களை விட பரிமாணத்தில் சிறியதாக இருக்கும். ஆனால், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதால், விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை. எனினும், இந்த எஸ்யூவி ரூ.32 லட்சம் முதல் ரூ.35 லட்சத்தையொட்டிய விலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
German luxury car manufacturer, Audi has commenced bookings for the Audi Q2 in India.
Story first published: Saturday, October 3, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X