மீண்டும் நம்பர்-1 ஆகணும்...மார்க்கெட்டை பிடிக்க விலை குறைவான எஸ்யூவியை களமிறக்கும் ஆடி!

இந்திய சந்தையில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்கும் வகையில், விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி கார் மாடலை  விற்பனைக்கு கொண்டு வருவதறே்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் கீழே தள்ளப்பட்ட ஆடி நிறுவனம், மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளது. இதற்காக, பல புதிய மாடல்களை இந்தியாவில் வரிசை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் ஏற்கனவே விலை உயர்ந்த க்யூ-8 மற்றும் ஏ8 எல் ஆகிய சொகுசு கார் மாடல்களை அறிமுகப்படுத்தியது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

இதைத்தொடர்ந்து, நேற்று ஆர்எஸ்-7 என்ற ஸ்போர்ட்ஸ் கூபே கார் மாடலை கொண்டு வந்தது. இதற்கு அடுத்து பட்ஜெட் சொகுசு கார் மார்க்கெட்டில் ஒரு புத்தம் புதிய மாடலை களமிறக்க ஆடி முடிவு செய்துள்ளது. அதாவது, இது எஸ்யூவி மாடல் என்பதுதான் இந்தியர்களின் ஆவலை தூண்டும் விஷயமாக இருக்கிறது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

ஆடி கார் நிறுவனத்தின் க்யூ வரிசையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி மாடல்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. தற்போது க்யூ வரிசையில் க்யூ-3 என்ற மாடல்தான் அந்நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடலாக உள்ளது. இந்த நிலையில், இதனைவிட குறைவான விலையில் க்யூ-2 எஸ்யூவியை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஆடி க்யூ-2 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோ கார் இந்தியா செய்தி மூலமாக உறுதியாகி இருக்கிறது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆடி க்யூ-2 எஸ்யூவி கார் பல்வேறு வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த சூழலில், தற்போது இந்தியாவிலும் இந்த புதிய மாடலை கொண்டு வருவதற்கு ஆடி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

ஆடி க்யூ-2 எஸ்யூவி கார் 4,191 மிமீ நீளமும், 1,794 மிமீ அகலமும், 1,508 மிமீ உயரமும் கொண்டதாக உள்ளது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,601 மிமீ ஆக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், வலிமையான தோற்றத்தை தரும் பம்பர், கருப்பு வண்ண கிளாடிங் சட்டங்கள், கவரும் வீல் ஆர்ச் டிசைன், இரட்டை புகைப்போக்கி குழல்கள், க்ராஸ்ஓவர் வடிவிலான கூரை அமைப்பு உள்ளிட்டவை மிக முக்கிய டிசைன் அம்சங்களாக உள்ளன.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

உட்புறத்திலும் டிசைன் மிக நேர்த்தியாகவும், பிரிமீயமாகவும் உள்ளது. இதனால், முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும். பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

இந்த காரில் 405 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், க்வாட்ரா ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டுகளில் 355 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

ஆடி க்யூ-2 எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி காரை களமிறக்கும் ஆடி!

புதிய ஆடி க்யூ-2 எஸ்யூவி ரூ.35 லட்சத்தையொட்டி ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட், சிறப்பம்சங்கள், டிசைன் என அனைத்திலும் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த புதிய சொகுசு எஸ்யூவி கார் கச்சிதமாக பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India has been on a roll this year, at least as far as launching news vehicles are concerned. The brand launched its Q8 and A8 L models earlier this year, and launched its second-generation RS7 Sportback just yesterday.
Story first published: Saturday, July 18, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X