ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

ஆடி நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான க்யூ2-வின் டீசரை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

ஆடி இந்தியா நிறுவனம் தற்சமயம் மிகுந்த பரபரப்புடன் இயங்கி வருகிறது. ஏனெனில் முன்னதாக க்யூ8, ஏ8எல் கார்களை அறிமுகப்படுத்திய இந்நிறுவனம் அதன்பின் ஆர்எஸ்7 மற்றும் ஆர்எஸ் க்யூ8 உள்ளிட்ட கார்களை புதியதாக இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்த நிலையில் இவற்றை தொடர்ந்து விரைவில் மிக மலிவான விலையில் க்யூ2 எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதற்கிடையில் தான் தற்போது இந்த எஸ்யூவி காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

காரின் விண்ட்ஷீல்டு, ஓஆர்விஎம் மற்றும் டெயில்லேம்ப் தவிர்த்து க்யூ2-வை பற்றி இந்த டீசரில் பெரிய அளவில் எதுவும் காட்டப்படவில்லை. முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசாங்கத்தின் புதிய சட்டத்தின் கீழ் ஒத்திசைவை தவிர்ப்பதற்காக வருடத்திற்கு 2,500 மாதிரிகள் என்ற கணக்கில் இந்த காரை நமது நாட்டு சந்தையில் ஆடி விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

தனது முதல் லக்சரி காரை வாங்க விரும்பும் இளம் வாடிக்கையாளர்களை நோக்கமாக வைத்து சந்தைக்குவரும் க்யூ2 எஸ்யூவி காரை, நீங்கள் க்யூ3, க்யூ5, க்யூ7 மற்றும் க்யூ8 உள்ளிட்ட கார்களை பார்த்திருந்திருந்தீர்கள் என்றால் மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்த வகையில் இதன் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஹெட்லைட்களுடன் பெரியதாக, சிங்கிள்-ஃப்ரேமில் க்ரில் உள்ளது. கருப்பு நிறத்தில் க்ளாடிங் ஒன்று பம்பர்கள், ரன்னிங் போர்ட்ஸ் மற்றும் சக்கர ஆர்ச்களை இணைத்தவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

பின்புறத்தில் சதுர வடிவில் நேர்த்தியான டிசைனில் டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு க்யூ2 எஸ்யூவி காரில் 2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரிலும் வழங்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்த என்ஜின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் அடைந்துவிடக்கூடிய இந்த ஆடி எஸ்யூவி காரின் அதிகப்பட்ச வேகம் 228kmph ஆகும். இந்த என்ஜின் உடன் குவாட்ரோ அனைத்து சக்கர ட்ரைவ் சிஸ்டம் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆடியின் புதிய தயாரிப்பு க்யூ2 எஸ்யூவி... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இதுவரை நமக்கு கிடைத்துள்ள தகவல்களில் ஆடியின் இந்த புதிய தயாரிப்பு இந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய ஷோரூம்களுக்கு வந்தடைந்துவிடும் என கூறப்படுவதால், க்யூ2-வின் அறிமுகத்தை மிக விரைவாகவே அடுத்த மாதத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.6

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q2 Teased Ahead Of India Launch
Story first published: Tuesday, September 8, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X