வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக் காரை பற்றிய விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

ஸ்போர்டியர் பண்புடன் வடிவமைக்கப்பட்ட ஆடியின் புதிய க்யூ5, கூபே-எஸ்யூவி ரக காராகும். சமீபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆடி தயாரிப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் தற்போதைய மாடர்ன் காலத்திற்கு ஏற்ற வசதிகளுடன் கொண்டுவரப்படவுள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

ஏற்கனவே கூறியதுபோல் க்யூ5 ஸ்போர்ட்பேக் கூபே கார்களின் பண்புகள் மற்றும் மடங்கக்கூடிய மேற்கூரையை கொண்ட எஸ்யூவி உடற் அமைப்பில் காட்சியளிக்கும் காராகும். டெயில்கேட்டில் ஸ்பாய்லர் உடன் உள்ள இந்த ஆடி காரின் இழுவை குணகம் வெறும் 0.30 ஆகும்.

கூபே லைன்களை தாண்டி பார்த்தோமேயானால் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருந்த அப்டேட்களை அப்படியே க்யூ5 ஸ்போர்ட்பேக்கும் பெற்றுள்ளது. இந்த வகையில் முன்பக்கத்தில் உள்ள சிங்கிள்-ஃப்ரேம் க்ரில் காரை சற்று அகலமானதாக காட்டுகிறது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

அதற்கு கீழே பம்பரில் உள்ள ஏர் வெண்ட்ஸ் மொத்த காருக்கும் ஸ்போர்டியர் பண்பை வழங்குகிறது. 18 இன்ச்சில் விட்டத்தை கொண்ட சக்கரங்கள் இந்த ஸ்போர்ட்பேக் காருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக 21 இன்ச் சக்கரங்கள் தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

அப்படியே பின்புறத்திற்கு சென்றால் முன்புறம் மற்றும் பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸில் வழங்கப்பட்டுள்ள சில்வர் அப்படியே பம்பரின் பாதி பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் டெயில்லேம்ப்களை இணைக்கும் க்ரோம் ட்ரிம்-ஐயும் தற்போது வெளியிடப்பட்டுள்ள இதன் படங்களில் பார்க்க முடிகிறது.

வழக்கமான ஆடி க்யூ5 காரை போன்று அதன் ஸ்போர்ட்பேக் வெர்சனுக்கும் ஹெட்லேம்ப் மேட்ரிக்ஸ் எல்இடி தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட்டாலும், டெயில்லேம்ப்கள் ஒஎல்இடி தரத்தில் உள்ளன. இவற்றில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தின் அளவையும் வாடிக்கையாளர்கள் கட்டுப்படுத்தலாம் என இதுகுறித்த விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

கார் டைனாமிக் மோடில் இருந்தால்கூட இந்த ஒளி கண்ட்ரோல்களை ஓட்டுனர் மேற்கொள்ளலாம். அதேபோல் பின்புறத்தில் உள்ள ஒஎல்இடி டெயில்லேம்ப்கள் இயக்கத்தின்போது வேறெந்த வாகனமாவது காருக்கு அருகில் வந்தால் அவற்றை எச்சரிக்கும் வகையில் ஒளியினை வெளிப்படுத்தும்.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

உட்புற கேபினில் ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக் ஹெட்ஸ்-அப் திரையுடன் 12.3 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

இதில் ஸ்டேரிங் சக்கரம் ஸ்டாண்டர்ட் க்யூ5-ல் உள்ளதை போன்று கிட்டத்தட்ட எஸ்யூவிக்கான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதலாக எம்ஐபி3 என அழைக்கப்படும் மாடுலர் இன்ஃபோடெயின்மெண்ட் ப்ளாட்ஃபாரத்தையும் இந்த ஆடி கார் கொண்டுள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

இந்த ப்ளாட்ஃபாரம் அதன் முந்தைய தலைமுறைகளை காட்டிலும் 10 மடங்கு வேகமானது. இவை மட்டுமின்றி சாலையின் தன்மை மற்றும் காலநிலை, போகும் பாதையில் உள்ள தடைகள் அல்லது விபத்துகள் உள்பட இலவச பார்க்கிங் மையங்களையும் காட்டக்கூடிய ஸ்விங்கார்ம் நுண்ணறிவு உடன் இணைப்பு கார் தொழிற்நுட்பத்தையும் இந்த கார் கொண்டுள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

டெயில்கேட் மிகவும் செங்குத்தாக வடிவமைகப்பட்டுள்ளதால் பின்புறத்தில் உள்ள பொருட்களை வைப்பதற்கான இடம் ஸ்டாண்டர்ட் க்யூ5 உடன் ஒப்பிடுகையில் 10 லிட்டர் கொள்ளளவு குறைவாக உள்ளது. அதேபோல் ஸ்டாண்டர்ட் இருக்கைகள் 510 லிட்டர்கள் கொள்ளளவிலும், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின் இருக்கை தொகுப்பு 570 லிட்டர் கொள்ளளவிலும் வழங்கப்பட்டுள்ளன.

அகலம் மற்றும் உயரத்தில் விற்பனையிலுள்ள க்யூ5 உடன் இந்த ஸ்போர்ட்பேக் வெர்சன் ஒத்து போனாலும், நீளத்தை அதிகமாக பெற்றுள்ளது. இதன் காரணமாக பின் இருக்கை பயணிகளுக்கு கூடுதல் இட வசதி கிடைத்துள்ளது. முன்பே கூறியதுபோல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் ஆடி நிறுவனம் புதிய க்யூ5 ஸ்போர்ட்பேக்கை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

இந்த வகையில் இந்த காருக்கு வழங்கப்படவுள்ள 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனுடன் 7-ஸ்பீடு எஸ்-ட்ரோனிக் ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ அனைத்து சக்கர ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டிருக்கும்.

இவற்றுடன் இந்த டர்போ டீசல் என்ஜின் மைல்ட் ஹைப்ட்ரீட் சிஸ்டத்தையும் பெற்றுள்ளது. இது கடற்கரை மணல் பகுதிகளில் கார் இயங்கும்போது என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலை பாதியாக குறைக்கும். ஆட்ப்ளூ-பொருத்தப்பட்ட ட்யூல்-எஸ்சிஆர் சிஸ்டத்துடன் இந்த டீசல் என்ஜின் யூரோ 6-க்கு இணக்கமானதாக வழங்கப்பட உள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

இந்த ட்யூல்-எஸ்சிஆர் சிஸ்டத்தில் ஒன்று பல பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பிற்கு அருகிலும், மற்றொன்று மாசு உமிழ்வை குறைக்க எக்ஸாஸ்டிற்கு கீழேயும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 4-சிலிண்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜினையும் பெரிய மற்றும் ஆற்றல்மிக்க வி6 டீசல் என்ஜின் தேர்வுகளையும் இந்த ஸ்போர்ட்பேக் காருக்கு ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது.

வேற லெவல் தொழிற்நுட்பங்களுடன் உருவாகியுள்ள ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக்... முழு விபரங்கள் வெளியானது...

ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக் காருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்4 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி கூபே நேரடி போட்டி கார்களாக விளங்குகின்றன. இவை இரண்டும் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இதனால் நம் நாட்டு சந்தைக்கு இந்த ஆடி கார் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், எப்போது வருகை தரும் என்பது குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.

சர்வதேச சந்தைக்கு புதிய ஆடி க்யூ5 ஸ்போர்ட்பேக் அடுத்த ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் தயாரிப்பு பணிகள் சீனாவில் உள்ள ஆடியின் சாங்சுன் தொழிற்சாலை அல்லது மெக்ஸிகோவில் உள்ள சான் ஜோஸ் சியாபா தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரலாம்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q5 Sportback revealed
Story first published: Saturday, September 26, 2020, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X