Just In
- 45 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Movies
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
25 வருடங்களுக்கு பிறகு ஆர்எஸ்2 அவந்த் காருக்கு பெருமை சேர்த்துள்ள ஆடி...
ஆர்எஸ் கார்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆர்எஸ்6 அவந்த் காரை அமெரிக்காவில் ஆடி நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய ஆர்எஸ் எடிசனை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிராண்டின் தனித்துவமான ஆர்எஸ்2 அவந்த் காரை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் டிசைன் பாகங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் உலகம் முழுவதும் உள்ள 25 வாடிக்கையாளர்களை மட்டுமே சென்றடைய உள்ளது.

அதாவது வெறும் 25 ஆர்எஸ்6 அவந்த் எடிசன் கார்கள் தான் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன. ஆர்எஸ்2 அவந்த் காரை பொறுத்தவரையில், 1994ல் விற்பனைக்கு வந்த இது ஆடி நிறுவனம் வேகம் சார்ந்த வேகன் பிரிவில் நுழைய காரணமாக இருந்த மாடலாகும்.

இதில் பொருத்தப்பட்டுள்ள 5-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 310 பிஎச்பி பவரை வெளிப்படுத்த திறன் கொண்டதாக உள்ளது. ஆர்எஸ்6 அவந்த் ஆனது கடந்த 25 வருடங்களில் ஆடி நிறுவனம் கார்கள் தயாரிப்பில் பெற்றுள்ள அனுபவங்களின் வெளிப்பாடாக வெளிவந்துள்ளது.

இதற்கு வழங்கப்பட்டுள்ள நோகாரோ ப்ளூ பேர்ல் நிறம் நம்மை பழைய ஆர்எஸ்2 காரை பற்றிய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது. ஆர்எஸ்6-ன் 25 யூனிட்களும் கருப்பு நிறத்தில் க்ரில், பக்கவாட்டு ப்ளேட்கள், பின்பக்க டிஃப்யூஸர் மற்றும் கருப்பு நிற மேற்கூரை ரெயில்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

பக்கவாட்டு கண்ணாடிகள் காரின் உடல் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 22 இன்ச்சில் ட்ரெப்சாய்டு வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ள 5-வி-ஸ்போக் அலுமினியம் சக்கரங்கள் சிவப்பு நிறத்தில் இரும்பு ப்ரேக் காலிபர்களை கொண்டுள்ளன.

கார்பன் இரட்டை கட்டமைப்புடன் டெனிம் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆடியின் இந்த புதிய எடிசன் காரின் கேபினில் வால்கோனா எஸ் ஸ்போர்ட் இருக்கைகள், துளையிடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், ஆர்எஸ் ஃப்ளோர் பாய்கள் மற்றும் டேஸ்போர்டின் மேல் & கீழ் பகுதிகளில் லெதர் பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவை எல்லாத்தையும் விட என்ஜின் அமைப்பில் தான் ஆர்எஸ்2 அவந்த காரில் இருந்து தற்போது எந்த நிலையில் நிறுவனம் உள்ளது என்பதை ஆடி வெளிக்காட்டியுள்ளது. ஏனெனில் ஆர்எஸ்6 லிமிடேட் எடிசனில் ஆற்றல்மிக்க 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜினை இந்நிறுவனம் பொருத்தியுள்ளது.

அதிகப்பட்சமாக 583 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் கார் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த ஆற்றல்மிக்க என்ஜின் உடன் ஓட்டுனர் உதவி தொகுப்புகளையும் ஆர்எஸ்6 பெற்று வந்துள்ளது.

ஆடி அடாப்டிவ் க்ரூஸ் உதவி மற்றும் ஆடி பக்கவாட்டு உதவி உள்ளிட்டவை அடங்கிய இந்த ஓட்டுனர் உதவி தொகுப்புடன் ஹீட்டட் பின் இருக்கைகள், ஹெட்-அப் திரை மற்றும் மென்மையாக மூடக்கூடிய கதவுகள் மற்றும் பேங் & ஓலுஃப்ஸென் 3டி அட்வான்ஸ்டு சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கிய நிர்வாக தொகுப்பையும் இந்த ஆடி லிமிடேட் எடிசன் கார் பெற்றுள்ளது.
ஆடி ஆர்எஸ்6 அவந்த் காரின் விலை அமெரிக்காவில் 136,800 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.44 கோடியாகும்.