இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

ஆடி ஆர்எஸ் க்யூ-8 சூப்பர் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர்-1 இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்காக, பல புதிய கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

சாதாரண வகை சொகுசு கார்கள் மட்டுமின்றி, தனது RS பிராண்டில் தயாரிக்கப்படும் அதிசெயல்திறன் மிக்க சொகுசு கார் மாடல்களையும் இந்தியா கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் ஆர்எஸ்-7 ஸ்போர்ட்பேக் காரை இந்தியாவில் களமிறக்கியது ஆடி.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இதைத்தொடர்ந்து, தற்போது ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவி மாடலை இந்தியாவில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. பண்டிகை கால ரிலீஸ் பட்டியில் உள்ள இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்படுவதாக அறிவித்துள்ளது ஆடி கார் நிறுவனம்.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

புதிய ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவிக்கு ரூ.15 லட்சம் முன்பணமாக செலுத்தி ஆடி கார் டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைக்கு ஜெர்மனியிலுள்ள நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கை அதிவேகத்தில் கடந்த தயாரிப்பு நிலை எஸ்யூவி மாடல் என்ற பெருமை இந்த காருக்கு உள்ளது. இந்த கார் 7 நிமிடங்கள் 42.2 வினாடிகளில் நர்ப்ர்க்ரிங் ரேஸ் டிராக்கில் ஒரு சுற்றை நிறைவு செய்து அசாத்திய சாதனையை படைத்துள்ளது.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

சாதாரண க்யூ-8 எஸ்யூவியில் இருந்து இந்த அதிசெயல்திறன் மிக்க எஸ்யூவி மாடலை வேறுபடுத்தும் விதத்தில், வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களும், தனித்துவமான அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

கருப்பு வண்ணத்திலான க்ரில் அமைப்பு, அதன்புறங்களில் கொடுக்கப்பட்டுள்ள சட்டம், கருப்பு பின்னணி கொண்ட எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், வலிமையான பம்பர் அமைப்பு, டிஃபியூசர், ஸ்பாய்லர், பிரத்யேக அலாய் வீல்கள் ஆகியவை இதன் வசீகரத்தை வேறு நிலைக்கு எடுத்துச் செல்கிறது. 22 அங்குல அல்லது 23 அங்குல அலாய் வீல்களுடன் கிடைக்கிறது.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்த காரில் பக்கெட் வகை இருக்கை அமைப்பு, விசேஷ அல்கான்ட்ரா லெதர் கவர்கள், ஆர்எஸ் கார்களுக்குரிய விசேஷ ஸ்டீயரிங் வீல் சிஸ்டம், வெர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவியில் 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி மாடலுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi announced that bookings for the RS Q8 SUV have begun ahead of its launch in the Indian market. The company announced earlier that it will bring more RS models to the market in the future. The RS Q8 shares similar mechanicals as the Lamborghini Urus.
Story first published: Thursday, August 6, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X