ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி கார் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடி க்யூ-8 எஸ்யூவியின் அடிப்படையிலான அதிசக்திவாய்ந்த மாடலாக ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. விசேஷ ஆக்சஸெரீகள், அதிசெயல்திறன் மிக்க வி8 எஞ்சின் ஆகியவற்றுடன் சூப்பர் எஸ்யூவி ரக மாடலாக வந்துள்ளது.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவியில் இரட்டை டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சினுக்கு கூடுதல் டார்க்கை தேவைப்படும்போது இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கும். இதனால், செயல்திறன் மிக சிறப்பாக இருப்பதுடன் எரிபொருள் சிக்கனத்தை அதிகரித்து சிறிய அளவு மாசு உமிழ்வு குறைப்புக்கும் உதவுகிறது.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் ஆடியின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த எஸ்யூவி கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 305 கிமீ வேகத்தை தொடும்.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி க்யூ8 எஸ்யூவியிலிருந்து இந்த ஆர்எஸ் பிராண்டின் பவர்ஃபுல் மாடலை வேறுபடுத்துவதற்காக பல முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு, டிஃபியூசர், விசேஷ ஸ்பாய்லர், 22 அங்குல அலாய் வீல்கள், ஆப்ஷனலாக 23 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை தோற்றத்திற்கு வலுசேர்க்கின்றன. ஆர்எஸ் பிராண்டு பேட்ஜும் இடம்பெற்றுள்ளது.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் பக்கெட் வகை இருக்கைகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், டைமண்ட் கட் சக்கரங்கள், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் புகைப்போக்கி, ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்து கொள்வதற்கான அலங்கார பாகங்கள், ஆக்சஸெரீகளும் கொடுக்கப்படுகின்றன.

 ஆடியின் சூப்பர் எஸ்யூவி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.2.07 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவியானது விற்பனைக்கு வந்துள்ளது. சாதாரண ஆடி க்யூ8 எஸ்யூவி ரூ.1.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், இந்த மாடல் ரூ.74 லட்சம் கூடுதல் விலையில் வந்துள்ளது. லம்போர்கினி உரூஸ் மற்றும் போர்ஷே கேயென் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has announced the launch of its sportiest Q, the all-new Audi RS Q8 in India. The Audi RS Q8 combines the power of an RS model with the elegance of a premium coupe and the ability of an SUV. The Audi RS Q8 is priced from INR 2.07 Crore.
Story first published: Thursday, August 27, 2020, 11:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X