ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான ஆடி கார் நிறுவனம் தனது சாதாரண சொகுசு கார்களின் அடிப்படையில் செயல்திறன் மிக்க மாடல்களை RS என்ற பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. அதிசெயல்திறன் மிக்க ஆர்எஸ் வரிசை கார்களுக்கு ஆடி கார் பிரியர்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த நிலையில், இந்தியாவிலும் ஆர்எஸ் வரிசையிலான ஆடியின் பெர்ஃபார்மென்ஸ் ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து ஆர்எஸ் பிராண்டில் பல புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் ஆர்எஸ்7 கார் மாடலை இந்தியாவில் கொண்டு வந்தது ஆடி.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

அப்போதே, ஆர்எஸ் வரிசையில் க்யூ-8 காரின் செயல்திறன் மிக்க ஆர்எஸ் க்யூ-8 மாடலை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஆடி தெரிவித்தது. அதன்படி, பண்டிகை காலத்தில் ஆர்எஸ்- க்யூ-8 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக, டீசரையும் வெளியிட்டு இருக்கிறது ஆடி கார் நிறுவனம்.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சாதாரண ஆடி க்யூ-8 சொகுசு எஸ்யூவியில் இருந்து இந்த புதிய ஆர்எஸ்-8 மாடல் தோற்றத்தில் சில மாறுதல்கள், கூடுதல் ஆக்சஸெரீகளுடன் அதிக சிறப்பு வாய்ந்தாக இருக்கிறது. ஆர்எஸ் க்யூ-8 மாடலானது முன்புறம் மிக வசீகரமாக காட்சி தருகிறது.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

கருப்பு வண்ணத்திலான பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, கரும் பூச்சு பின்னணியுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், 22 அங்குல அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் ரக இருக்கைகள், அல்கான்ட்ரா லெதர் பயன்பாடு, தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங், வெர்ச்சுவல் காக்பிட் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் மிகவும் பிரிமீயமாக இருக்கிறது. 23 அங்குல அலாய் வீல்களும் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவியில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருப்பதுடன், எஞ்சின் சக்தி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும்.

ஆடி ஆர்எஸ் க்யூ-8 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஆடி ஆர்எஸ் க்யூ-8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறன் மிக்க சொகுசு எஸ்யூவி மாடல்களை எதிர்பார்ப்போருக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
German auto manufacturer Audi has released a teaser of the new RS Q8 model ahead of its India launch. The teaser shared by the company hints that a launch is expected soon.
Story first published: Saturday, August 1, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X