ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

ஆடி நிறுவனத்தின் இந்திய இணையத்தள பக்கத்திற்கு எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் பெயர் கொண்டுவரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

கடந்த 2020 அக்டோபர் மாத மத்தியில் ஆடி நிறுவனம் க்யூ2 எஸ்யூவி காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அப்போது அந்த அறிமுக நிகழ்ச்சியில் ஆடி அடுத்த இந்தியாவிற்கான மாடலாக எஸ்5 ஸ்போர்ட்பேக்கின் டீசர் படங்களை வெளியிட்டு இருந்தது.

ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

இதனால் இதன் அறிமுகம் இந்த தீபாவளி பண்டிகை மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது இந்த ஸ்போர்ட்பேக் காரின் பெயர் ஆடியின் இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் ஆனது 4-கதவுகளை கொண்ட கூபே ரக காராகும். இதன் ஸ்போர்டியான தோற்றத்திற்கு ஆடியின் சிங்கிள்-ஃப்ரேம் க்ரில் அமைப்பு முக்கிய காரணமாக உள்ளது. 19 இன்ச் அலாய் சக்கரங்களுடன் குவாட் எக்ஸாஸ்ட் குழாய் இந்த காரில் வழங்கப்படுகிறது.

ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

கதவுகளுக்கான பில்லர்கள் இல்லாத கூபே காரான எஸ்5 ஸ்போர்ட்பேக், உட்புறத்தில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என வழக்கமான அம்சங்களையே பெறுகிறது.

ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எஸ்5 ஸ்போர்ட்பேக்கில் 3.0 லிட்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 349 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

ஆடியின் இணையத்தள பக்கத்திற்கு வந்தது எஸ்5 ஸ்போர்ட்பேக்!! ஆளை மயக்கும் தோற்றம்

கம்ஃபர்ட், ஆட்டோ, டைனாமிக் மற்றும் தனிப்பட்ட என்ற நான்கு விதமான ட்ரைவிங் மோட்களுடன் வழங்கப்படும் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் 0-வில் இருந்து 100 kmph என்ற வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும். எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆடி எஸ்5-யின் ஸ்போர்டி வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi S5 Updated In Website ahead of launch.
Story first published: Wednesday, November 18, 2020, 1:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X