2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

2021 ஏ4 செடான் காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் துவங்கியுள்ளதாக ஆடி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 2021 ஆடி காரை பற்றி இந்த செய்தில் பார்ப்போம்.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

இந்த 2021ஆம் ஆண்டில் ஜெர்மனை சேர்ந்த ஆடி பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள முதல் கார் மாடலாக ஐந்தாம் தலைமுறை ஏ4 உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.45 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

தற்போது துவங்கப்பட்டுள்ள இதன் முன்பதிவிற்கான முன் தொகையாக ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடியின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலமாகவோ அல்லது எதாவது ஒரு டீலர்ஷிப் மூலமாக இந்த ஆடி செடான் காரை முன்பதிவு செய்யலாம்.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

முன்பதிவு சலுகையாக, 4-வருட விரிவான சேவை தொகுப்பையும் இந்த காருக்கு ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது. 2021 ஆடி ஏ4 செடான் காரில் புதிய 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

அதிகப்பட்சமாக 192 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உதவியுடன் காரை 0-வில் 100kmph வேகத்திற்கு வெறும் 7.3 வினாடிகளில் கொண்டு செல்ல முடியும். ஆடி ஏ4 காரானது இந்தியாவில் உள்ள ஸ்கோடா ஆட்டோவின் அவ்ரங்காபாத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

ஐந்தாம் தலைமுறை இந்த ஜெர்மன் செடான் கார் அதிக கட்டிங் எட்ஜ்களுடன் முன்பை காட்டிலும் ஸ்போர்டியரான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய எம்எம்ஐ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் ஏ4 முழு-கனெக்டட் கார் ஆகும்.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

"புதிய ஏ4 ஸ்டைலிங் மற்றும் அம்ச மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, மேலும் இது விளையாட்டுத்திறன் மற்றும் நுட்பமான கலவையாகும். அதிக செயல்திறன் கொண்ட செடான் முற்போக்கான மற்றும் நன்கு நிறுவப்பட்ட நபர்களை ஈர்க்கும் வாகனமாகும். புதிய ஆடி ஏ4 எங்களுக்கு சக்தி நிறைந்த ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும்.

2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! 2021ல் கார் அறிமுகமாகிறது

மேலும் அந்த பிரிவில் வாங்குபவர்களை ஈர்ப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். 2021ல் பல தயாரிப்பு வெளியீடுகள் இருக்கும், மேலும் இந்தியாவில் பிராண்டை வடிவமைத்த ஒரு மாதிரியுடன் ஆண்டைத் தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தலைவர் ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பல்பீர் சிங் தில்லான் கூறியுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Sportier and Modern: Audi India opens bookings for the New Audi A4
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X