இக்னிஸ் காரை மெருகேற்றியது மாருதி... ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அமர்க்களமாக அறிமுகம்!!

மாருதி இக்னிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இக்னிஸ் காரை மெருகேற்றியது மாருதி... ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அமர்க்களமாக அறிமுகம்!!

ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழாவில், மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் (Maruti Ignis Facelift) மாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்னிஸ் காரை மெருகேற்றியது மாருதி... ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அமர்க்களமாக அறிமுகம்!!

மாருதி சுஸுகி நிறுவனம் இக்னிஸ் காரை நெக்ஸா (Nexa) டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. எண்ட்ரி-லெவல் மாடலான இக்னிஸ், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின் கடந்த 2019ம் ஆண்டு சிறிய அளவிலான அப்டேட்களை மட்டும் இந்த கார் பெற்றது.

இக்னிஸ் காரை மெருகேற்றியது மாருதி... ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அமர்க்களமாக அறிமுகம்!!

இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழாவின் வாயிலாக இக்னிஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இக்னிஸ் காரை மெருகேற்றியது மாருதி... ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அமர்க்களமாக அறிமுகம்!!

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், புதிய முன்பக்க பம்பர், க்ரில் மற்றும் பனி விளக்குகள் அறையை பெற்றுள்ளது. இதன் முன்பக்க க்ரில், மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரில் இருப்பதை போன்று உள்ளது. ஆனால் பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இக்னிஸ் காரை மெருகேற்றியது மாருதி... ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அமர்க்களமாக அறிமுகம்!!

ஆனால் புதிய டர்க்கைஸ் ப்ளூ மற்றும் லூசெண்ட் ஆரஞ்ச் ஆகிய கலர் ஆப்ஷன்களை இந்த கார் பெற்றுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன், மாருதியின் 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனையும் இந்த கார் பெற்றுள்ளது.

அதே சமயம் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டிஆர்எல்கள், அலாய் வீல்கள் தொடர்கின்றன.

மேலும் ஆட்டோ ஏசி, ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. புதிய இக்னிஸ் கார் வரும் வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை சிறிதளவு உயரலாம் எனவும் தெரிகிறது.

இந்தியா முழுவதும் உள்ள நெக்ஸா ஷோரூம்களில், 2020 இக்னிஸ் காருக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர், டாடா டியாகோ, டட்சன் கோ மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ ஆகிய கார்களுடன் மாருதி இக்னிஸ் தொடர்ந்து போட்டியிடும்.

Most Read Articles
English summary
Auto Expo 2020: Maruti Ignis Facelift Unveiled. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X