30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

உலகளவில் பிரபலமான லம்போர்கினி நிறுவனம் அதன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான டையப்லோவின் விற்பனை பயணத்தில் 30 வருடத்தை கொண்டாடி வருகிறது. இந்த லம்போர்கினி காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

லம்போர்கினி டையப்லோ முதன்முதலாக 1990ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அனைத்து விதமான வாடிக்கையாளருக்கும் வழங்கப்படுவதற்கு முன்னர் 5 ஆண்டுகள் இந்த ஸ்போர்ட்ஸ் கார் வடிவமைப்பு பணியில் இருந்தது.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

இத்தாலிய நாட்டை சேர்ந்த மார்செல்லோ காந்தினி, இவர்தான் இந்த லம்போர்கினி காரின் நேர்த்தியான தோற்றத்தை வடிவமைத்தார். இவரது இறுதி முடிவை க்றைஸ்லரின் டிசைன் மையம் சிறிது திருத்தியமைத்தது.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

1990ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அதிவேகமான கார் என்ற பெயரை டையப்லோ பெற்றிருந்தது. இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 325kmph. இத்தகைய திறனிற்கு காரணம், இந்த காரில் வழங்கப்படும் என்ஜினே ஆகும்.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

மல்டி-பாயிண்ட் எலக்ட்ரானிக் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் ஒவ்வொரு சிலிண்டருக்கும் 4 ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்ஸ் மற்றும் 4 வால்வுகளை கொண்ட 5.7 லிட்டர் என்ஜின் லம்போர்கினி டையப்லோவில் வழங்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 485 பிஎச்பி மற்றும் 580 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 1993 வரையில் ஓட்டுனர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பவர் ஸ்டேரிங் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்படவில்லை. வளர்ச்சி பணிகளில் ரேலி சாம்பியன் சாண்ட்ரோ முனாரி கலந்து கொண்டதால் இது முழுமையான டைனாமிக் பண்பை பெற்று வந்தது.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

1990-க்கு பிறகு 1993ல் லம்போர்கினி நிறுவனம் 4-சக்கர ட்ரைவ் உடன் டையப்லோ விடி மாடலை விற்பனைக்கு கொண்டுவந்தது. இது மெக்கானிக்கல் அப்கிரேட்கள் மட்டுமின்றி ஸ்டைலிஷான் மாற்றங்களை ஏற்று வந்தது. இவை அனைத்தும் அதன்பின் வெளிவந்த இதன் இரு-சக்கர ட்ரைவ் வெர்சனுக்கும் வழங்கப்பட்டன.

30 வயதை கடந்த லம்போர்கினி டையப்லோ ஸ்போர்ட்ஸ் கார்!! 1990ன் அதிவேகமான கார் இதுதானாம்...

மொத்தம் 2903 டையப்லோ கார்களை லம்போர்கினி நிறுவனம் உலகளவில் விற்பனை செய்துள்ளது. 2001 வரையில்தான் இந்த சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் விற்பனையில் இருந்தாலும், தற்போதும் பலரால் லம்போர்கினி டையப்லோ நினைவுக்கூரப்பட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Lamborghini Celebrates 30 Years Of The Diablo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X