ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

ஜீப்புகளை மாடிஃபை செய்யும் நிறுவனம் ஒன்றும் மிக சிறிய மின்சார ஜீப் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல் மற்றும் வீடியோவை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் இன்றளவும் சீரான கட்டமைப்பில்லாத சூழ்நிலையிலேயே காட்சியளிக்கின்றது. இதனாலேயே இந்தியாவில் ஆன்-ரோடு வாகனங்களுக்கு இணையான வரவேற்பை ஆஃப்-ரோடர் வாகனங்களும் பெற்று வருகின்றன.

அதிலும், ஜீப் போன்ற ஆஃப்-ரோடர் வாகனங்களுக்கு எப்போதும் பச்சை கொடிதான். ஜீப் ரக வாகனத்தை இந்தியாவில் முதல் முதலாக மஹிந்திரா நிறுவனமே அறிமுகம் செய்தது.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

இந்நிறுவனத்தின் ஜீப் வாகனங்கள் இந்திய காவல்துறைக்கு மிகவும் பிடித்தமான வாகங்களில் ஒன்று. ஜாம்பவான் நிறுவனமான டாடாவின் தயாரிப்புகளுக்கே மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் பொலேரோ போன்ற வாகனங்கள் கடுமையான டஃப் கொடுத்தன. அந்தளவில் ஜீப் ரக வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல மவுசு நிலவி வருகின்றது.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

இந்நிலையில், ஆஃப் ரோடர் பயண பிரியர்களின் மிகவும் பிடித்தமான வாகனமாக திகழும் இந்த ஜீப்பினை, இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் மிகச் சிறிய உருவத்தில் வடிவமைத்துள்ளார்.

ஜீப்பின் ஜெராக்ஸைப் போல் காட்சியளிக்கும் இந்த வாகனம் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாகக இது மின்சார வாகனம் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். தொடர்ந்து, இதேபோன்று வெறென்னவெல்லாம் சிறப்பு வசதிகள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது என்பதனை கீழே காணலாம்.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

மினி சைஸில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜீப்பில் பெரியவர்கள் எப்படி பயணிப்பார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். மன்னிக்கவும், இது பெரியவர்களுக்கானது அல்ல. சிறுவர்களுக்கான மின்சார வாகனம் ஆகும். அதேசமயம், இது பொம்மை வாகனம் அல்ல.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

பொதுவாக, சிறுவர்களின் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் பேட்டரி வாகனமே இருக்கும். ஆனால், அவை சீனா மற்றும் ஜப்பான் போன்ற அண்டை நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

இந்நிலையில், வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் புதிய சிறிய மின்சார ஜீப்பை இந்திய இளைஞர் வடிவமைத்துள்ளார். இதனை சிறுவர்களின் பயன்பாட்டிற்காக விற்பனைச் செய்ய இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவை அங்கிதா ஜீப்ஸ் என்ற யுடியூப் சேனல் வாயிலாக அந்த இளைஞர் வெளியிட்டுள்ளார். அதில், மினி ஜீப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாடுகுறித்த அனைத்து தகவல்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

வீடியோவின் ஆரம்பத்தில் மினி ஜீப்பின் அறிமுகமாக உள் பக்கம், பேட்டரி, இருக்கை வசதி, வீல், ரூஃப் பகுதி, பின்னிருக்கை, க்ளஸ்ட், ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் லிவர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து, அங்கிதா ஜீப்பை மாடிஃபை செய்தவர் அதைப் பற்றி விளக்குகின்றார். இந்நிறுவனம், ஜீப்பை மாடிஃபை செய்வதில் கைதேர்ந்தவர்கள் ஆவர்.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

அதனடிப்படையிலேயே, ஜீப்பின் வடிவமைப்பில் இந்த மினி ஜீப்பை வடிவமைத்துள்ளனர். இந்த வாகனம் ஜீப்பின் மினி ஜெராக்ஸாகவே காட்சியளிக்கின்றது. ஆகையால், ஜீப்பை ஏதோ மந்திரத்தின்மூலம் சிறியதாக்கிவிட்டார்களோ என்ற எண்ணம் அந்த வாகனத்தைப் பார்ப்போர்கள் மத்தியில் தோன்றுகின்றது.

அந்தளவிற்கு சிறு அம்சம்கூட தவறாமல் மினி ஜீப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோவை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

குறிப்பாக, சொகுசான இருக்கை வசதி, முகப்பு பகுதி க்ரில், எல்இடி ஹெட்லைட், இன்டிகேட்டர், சைடு மிர்ரர், பின்பக்கத்தில் ஸ்டெப்னி வீல் மற்றும் கதவு உள்ளிட்ட ஜீப்பிற்கு உரித்தான அனைத்து வசதிகளும் இந்த மினி ஜீப்பில் வழங்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கின்றது.

இதேபோன்று, மினி ஜீப்பின் பக்கவாட்டு பகுதியில் சுத்தியல் போன்ற சில கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், கதவு கொடுக்கப்படவில்லை.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

தொடர்ந்து, மினி ஜீப்பிற்கான எஞ்ஜின் மற்றும் பேட்டரிகள் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கிமீ வரை கிமீ ரேஞ்ச் கிடைக்குமாம். இதற்காக நான்கு பேட்டரிகள் மினி ஜீப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இதன் ஸ்டைல் நம்மை கவர தவறுவதில்லை. இந்த வாகனம் சாலையில் செல்லுமானால் பலரின் கவனத்தை ஈர்ப்பதுடன், மனதை கொள்ளைச் செய்யும் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.

மினி ஜீப்பின் வீலுக்காக பைக்குகளின் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமே ஜீப் வாகனத்திற்கான தோற்றத்தில் சிறிய தகவறாக உள்ளது. ஏனென்றால் ஜீப்பில் மிகவும் அகலமான டயர்கள் இணைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால், இது பெரிய குறையாக தெரியவில்லை. இதையடுத்து தொழில்நுட்ப வசதியாக காரின் இன்டீரியரில் தொடு திரை வசதி அடங்கிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், மேற்கூரையை அகற்றும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

இதுபோன்ற பல்வேறு வசதிகளை அது உள்ளடக்கியிருப்பதால் பெரியவர்களிடத்தில்கூட ஒரு முறையாக மினி ஜீப்பை இயக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஒட்டிக்கொள்கின்றது. ஆகையால், சிறுவர்கள் மட்டுமின்றி இந்த வாகனம் பெரியவர்கள்மத்தியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வாகனத்தில் இணைக்கப்பட்டிருப்பதால் இதன் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப பாடி நிறத்திற்கு ஒத்துப்போகின்ற வகையிலான இருக்கை, சொகுசு வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏராளமான பிரிமியம் வசதிகளும் இந்த மினி ஜீப்பில் காணப்படுகின்றது.

ரூ. 3 லட்சம் மட்டுமே... உலகின் மிக சிறிய ஜீப்... அடேங்கப்பா இதுல இவ்ளோ வசதி இருக்கா..?

இந்த மினி எலெக்ட்ரிக் ஜீப்பில் ரிவர்ஸ் கியர் வழங்கப்பட்டுள்ளது. இது ஜீப்பை முன்னே மற்றும் பின்னோக்கி செல்ல வைப்பதற்கு மட்டுமே உதவும். இதன் டாப் ஸ்பீடு பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது சிறுவர்கள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் 30 கிமீட்டருக்கும் குறைவான வேகமே இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Battery Mini Jeep For Kids. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X