அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

கிட்டத்தட்ட 2000களின் துவக்கத்தில் விற்பனையான சமயத்தில் கொண்டிருந்த தோற்றத்திற்கு டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று மாற்றப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய விரிவான தகவலகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

2000களில் பிரபலமாக இருந்த டொயோட்டா தயாரிப்பு தான் குவாலிஸ். 2000ல் அறிமுகமான இந்த எம்பிவி மாடல் 2004 வரையில் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தது. ஆனால் அதன்பின் இதன் விற்பனையை நிறுத்திய டொயோட்டா, குவாலிஸிற்கு மாற்றாக இன்னோவாவை கொண்டுவந்தது.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

தற்போதுவரை டொயோட்டாவின் அடையாளமாக விளங்கிவரும் இன்னோவாவின் இரண்டம் தலைமுறை கார் இன்னோவா க்ரிஸ்டா என்ற பெயரில் விற்பனையில் இருக்கிறது. சரி மீண்டும் குவாலிஸின் விஷயத்திற்கு வருவோம், விற்பனையான நான்கு வருடங்களிலும் இந்த எம்பிவி கார் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளிலேயே பெற்றுவந்தது.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

தனிப்பயன்பாட்டிற்கு அதிகளவில் விற்பனையான இந்த கார் அதே சமயத்தில் கமர்ஷியல் பயன்பாட்டுகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால் தற்போதும் பலரிடம் உள்ள இந்த வாகனத்தை சிலர் தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான தோற்றத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

அதன்படி பழமையான தோற்றத்தில் இருக்கும் குவாலிஸ் கார் குறித்து ஜேஜோன் டூல்ஸ் என்ற யுடியுப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில் கிட்டத்தட்ட 2000களின் துவக்கத்தில் விற்பனையான டொயோட்டா குவாலிஸின் தோற்றத்தை கொண்ட தற்போதைய குவாலிஸ் மாதிரியை பார்க்கலாம்.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

முன்புறத்தில் அதே ஹெட்லேம்ப் செட்அப்-ஐ தான் கொண்டிருந்தாலும், அந்த செட்அப்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள சில பாகங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. எல்இடி ஸ்ட்ரிப்களுடன் உள்ள இந்த ஹெட்லைட் அமைப்பு டிஆர்எல்கள் மட்டுமின்றி பெகான் ஆகவும் கூட செயல்படக்கூடியவை.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

அதேபோல் முன் பம்பரிலும் வழக்கமான ஆக்ஸலரி விளக்குகளை பார்க்க முடிகிறது. ஃபாக் விளக்குகளுக்கு சற்று மேற்புறத்தில் எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டுள்ள இந்த எம்பிவி கார் முன்பக்கத்தில் கீழ்புறத்தில் உள்ள ஸ்கிர்டிங்-ஆல் விலை குறைவான கார் போன்று தோற்றமளிக்கிறது.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

பக்கவாட்டில் புதிய அலாய் சக்கரங்களை தவிர்த்து பெரிய அளவில் வேறுபாடு இல்லை. க்ரோம் கதவு ஹேண்டில்கள், ஓஆர்விஎம்-கள் மற்றும் மழை வருவதை உணரும் அமைப்பு உள்ளிட்டவை அனைத்தும் இந்த மாடிஃபை காரில் உள்ளன. இவற்றுடன் சந்தைக்கு பிறகான எக்ஸாஸ்ட்டையும் பார்க்க முடிகிறது.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

நேர்த்தியான ஆரஞ்ச் நிற ஷேடில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் உட்புறத்தில் ஸ்டாக் மாடலில் இருந்து வேறுபட்ட ஐஆர்விஎம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ பின்புறத்தை பார்ப்பதற்கான கேமிரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்டவையும் இதன் கேபினில் இருப்பதை காட்டுகின்றன.

அதே தோற்றத்தில் தற்போதும் பயன்பாட்டில் இருக்கும் டொயோட்டா குவாலிஸ்...

கதவு பேட்கள், டேஸ்போர்டு இருக்கை உள்ளிட்டவற்றை ஆரஞ்ச் நிறத்தில் கொண்டுள்ள இந்த கார், எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ புதியதாக பெற்றுள்ளது. இயக்க ஆற்றலிற்கு 75 பிஎச்பி மற்றும் 151 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் டீசல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Resto-modded Toyota Qualis is a rare find
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X