Just In
- 32 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பென்ட்லீ பென்டைகாவின் ஸ்பீடு ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு தயார்... முழு விபரங்கள் வெளியீடு...
பென்டைகா ஃபேஸ்லிஃப்ட் காரை தொடர்ந்து பென்டைகா ஸ்பீடு மாடலின் அப்டேட் வெர்சனை பற்றிய தகவல்களை பென்ட்லீ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ப்ளாக் பேக்கேஜ் உடன் விற்பனை செய்யப்படவுள்ள பென்ட்லீயின் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் டபிள்12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6.0 லிட்டரில் வழங்கப்பட்டுள்ள இந்த டபிள்யூ12 என்ஜின் அதிகப்பட்சமாக 626 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பென்ட்லீ காரின் அதிகப்பட்ச வேகம் 306kmph ஆகும்.

பென்டைகா ஸ்பீடு ஃபேஸ்லிஃப்ட் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், 48 வோல்ட் சிஸ்டம், சிலிண்டர் டீஆக்டிவேஷன் தொழிற்நுட்பம், ட்ரைவ் மோட்கள் மற்றும் டார்க் வெக்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் உள்ளன. இவற்றுடன் டிசைனிலும் குறிப்பிடத்தகுந்த அளவிலான மாற்றங்களையும் இந்த புதிய தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது.

இதில் சற்று திருத்தியமைக்கபட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், கருப்பு நிறத்தில் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்கள், காரின் உடல் நிறத்தில் பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸ், மெஷ் க்ரில், 22 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் சற்று பெரியதாக்கப்பட்ட ஸ்பாய்லர் உள்ளிட்டவை அடங்குகின்றன.

காரின் உட்புறம் லெதர் பாகங்களுடன் முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கைகளில் பென்டைகாவின் ஸ்பீடு வெர்சன் என்பதை காட்டுவிதமாக 'speed' என்ற வார்த்தை தையலிடப்பட்டுள்ளது. மற்ற அப்டேட்களில் ஒன்றாக வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடியதாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 10.29 இன்ச் தொடுத்திரையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஹெட்ஸ்-அப் திரை, யுஎஸ்பி டைப்-சி சாக்கெட்ஸ் மற்றும் முழுவதும் டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் புதிய பென்டைகா ஸ்பீடு ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ளன. மேலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாடிக்கையாளர்கள் கருப்பு தொகுப்புடனும் பெறலாம்.

இந்த தொகுப்பில் காரில் பிரகாசமான நிறத்தில் உள்ள க்ரோம் & பாகங்கள் அனைத்தும் பளபளப்பான கருப்பு அல்லது கார்பன் ஃபைபர் நிறத்தில் வழங்கப்படும். முன்புற பம்பர் பிரிப்பான் மற்றும் பக்கவாட்டு சில்ஸ் போன்றவை இந்த கருப்பு தொகுப்பில் கார்பன் ஃபைபர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதேபோல் பின்புற பம்பர் டிஃப்யூஸர், மேற்கூரை, 22 இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் எக்ஸாஸ்ட் முனை உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்படும். மேலும் கருப்பு தொகுப்பில் வழக்கமான ரூஃப் ஸ்பாய்லருக்கு பதிலாக கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்ட வளைந்த ஸ்பாய்லர் பொருத்தப்படும்.