மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

அதிக விலைக்கொண்ட கார்களாக விற்கப்படும் பென்ஸ் நிறுவனத்தின் சிஎல்ஏ கார் மூஸ் எனும் சோதனையில் மண்ணைக் கவ்வியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு வாகனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களும் ஒன்று. உலக புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் கார்கள் அதிக சொகுசு வசதிகளுக்கு மட்டுமின்றி கன்ட்ரோல் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கும் பெயர் போனவையாக காட்சியளிக்கின்றன. இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலயே இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் நான்கு சக்கர வாகன தேர்வில் இந்நிறுவனத்தின் கார்கள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளின்கீழ் அதன் கார்களை உலகம் முழுவதிலும் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், சிஎல்ஏ எனும் பிராண்டில் ஆரம்பநிலை சொகுசு கார்களை அது உலகின் பல்வேறு நாடுகளில் களமிறக்கி வருகின்றது. இது ஆரம்பநிலை மாடல் என்பதால் விலையையும், அம்சங்களையும் அளவோடு தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

இருப்பினும், கவர்ச்சியான தோற்றத்தில் துளியளவும் குறைச்சலின்றி காணப்படுகின்றது. இருப்பினும், இந்த காரில் புதுப்பிலை வழங்கும் விதமாக 2020ம் ஆண்டிற்கு ஏற்ப மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அந்த காரை மாற்றியமைத்துள்ளது. இந்த புதுப்பித்தலின் மூலம் பென்ஸ் சிஎல்ஏ கார் முன்பைக் காட்டிலும் கூடுதல் பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்டி லுக்கைப் பெற்றிருக்கின்றது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

மேலும், கூடுதல் நீளமான காராக மாறியிருக்கின்றது. இருப்பினும், இந்த தோற்ற மாற்றத்திற்கு என்ன பயன் என்று கேள்வி கேட்பதைப் போன்று ஒரு சாதாரண பரிசோதனையில் சிஎல்ஏ கார் மண்ணைக் கவ்வியிருக்கின்றது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

பொதுவாக, எந்தவொரு நிறுவனமும் காரை அப்கிரேட் செய்தாலோ அல்லது புதிய காரை சந்தையில் அறிமுகம் செய்தாலோ சில ஆரம்பநிலை இயக்கங்கள்குறித்த ஆய்வை அது மேற்கொள்ளும். அந்தவகையிலான மூஸ் (Moose) எனும் பரிசோதனையில் புதுப்பிக்கப்பட்ட சிஎல்ஏ கார் ஈடுபடுத்தப்பட்டது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

அதிகவேக ஓட்டத்தின்போது கார் எத்தகைய கன்ட்ரோல்களைக் அதன் டிரைவருக்கு வழங்கும் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்காக செய்யப்படும் ஆய்வுகளில் ஒன்றுதான் இந்த மூஸ் ஆய்வு.

இந்த பரிசோதனையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான விடையை இந்த கார் வழங்கியுள்ளது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

அதாவது அதிகபட்சமாக 76 கிமீ வேகத்தில் அந்த கார் பயணிக்கும் போது லேசாக கட்டுப்பாட்டை இழந்து இலக்கைத் தாண்டி சென்றது. இதனால் அது சாலையோர தடுப்பின் டம்மிக்காக நிறுத்தப்பட்டிருந்தவை மீது அது மோதியது. இதே விடையைதான் அடுத்த வேகமான 73கிமீ என்ற வேகத்தில் வழங்கியது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

ஆனால், குறைந்த வேகமான மணிக்கு 68 கிமீ என்ற விகிதத்தில் இது எந்தவொரு பின் விளைவையும் சந்திக்காமல் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் சிறப்பாக வினையாற்றியுள்ளது. ஆகையால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆரம்பநிலை மாடலாக இருக்கும் சிஎல்ஏ காரை பயன்படுத்தும்போது குறைந்த வேகத்தில் பயணித்தால் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

பொதுவாக இதுபோன்ற பரிசோதனையில் நல்ல இயக்கும் திறனுடைய ஓட்டுநர்களையே அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தும். அந்தவகையில், பென்ஸ் சிஎல்ஏ காரை இயக்கியவரும் நன்கு தேர்ச்சிப் பெற்ற ஓட்டுநர் ஆவார். ஆனால், அதிக வேகம் மற்றும் விலை குறைந்த மாடல் என்பதால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய ரிசல்டை இந்த சொகுசு கார் பெற்றிருக்கின்றது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

சிஎல்ஏ கார் அழகிய தோற்றம் கொண்ட 4 டூர் செடான் ரக காராகும். இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த சோதனையில் கண்டறியப்பட்ட குறைபாட்டைப் போக்குகின்ற வகையிலான முயற்சியில் பென்ஸ் நிறுவனம் இனி ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூஸ் பரிசோதனையில் மண்ணை கவ்விய பென்ஸ் சிஎல்ஏ.. என்னப்பா இப்படி சொதப்பிட்டீங்களே!

இந்த மூஸ் பரிசோதனைக் குறித்த வீடியோவை கேஎம்77 என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அது வெளியிட்ட வீடியோவைதான் நீங்கள் மேலே கண்டீர்கள். புதுப்பித்தலைப் பெற்றிருப்பதால் இந்த காரின் விலை அதிகரிப்புடன் உலகெங்கிலும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

Source: km77.com/YouTube

Most Read Articles

English summary
Benz CLA Fails In Moose Test. Read In Tamil.
Story first published: Wednesday, April 8, 2020, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X