Just In
- 51 min ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 1 hr ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
- 3 hrs ago
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- 3 hrs ago
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
Don't Miss!
- News
குடியரசு தின கொண்டாட்டம் LIVE: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா இதுவல்லவா கார்... மினி டாஸ்மாக் வசதியுடன் தயாராகிய கார்... குடி-மகன்களின் கண்ணில் படாம பாத்துக்கோங்க!!
பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு காரொன்று மின் பார் வசதியுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாக வாகனங்கள் சில நம்ப முடியாத உருவத்தையும், வசதிகளையும் பெற்று வருகின்றன. அந்தவகையில், சூப்பர் லக்சூரி கார்கள் என புகழப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றையே நாம் நம்ப முடியாத வசதிக்கு மாடிஃபிகேஷன் வாயிலாக மாற்றியமைத்திருக்கின்றனர். ஆமாங்க, தலைப்பில் கூறப்பட்டிருப்பதைப் போல மினி பார் வசதியுடன் இந்த கார் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி காப்பி மெஷினையும் கூட இந்த காரில் அவர்கள் நிலை நிறுத்தியிருக்கின்றனர். இத்தகைய சிறப்பு வசதிகள் அனைத்தையும் பெற்றிருப்பது பென்ஸ் நிறுவனத்தின் வி-கிளாஸ் ரக சொகுசு காராகும். இஸ்தான்புல்-ஐச் சேர்ந்த ஓகேசியூ எனும் வாகனங்களை மாற்றியமைக்கும் நிறுவனமே மேலேகூறிய சிறப்பு வசதிகளை மாடிஃபிகேஷன் மூலம் வழங்கிய நிறுவனம் ஆகும்.

இந்த மாடிஃபிகேஷனானது வி-கிளாஸ் சொகுசு காரின் உட்பகுதியில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதாவது கூடுதல் லக்சூரி வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த மாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மினி பார் மற்றும் காஃபி மெஷின் மட்டுமின்றி இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி, பெரிய திரைகள் மற்றும் புதிய மொபைல் கம்யூனிகேஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, மிகப்பெரிய மாற்றமாக காரின் உட்பகுதியில் இருந்த இருக்கைகள் நீக்கப்பட்டு, புதிய அதிக சொகுசு வசதிகள் கொண்ட நான்கு இருக்கைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த இருக்கைகள் ஒவ்வொன்றும் படுக்கையைபோல் அதிக சாய்மானத்தையும், கால்களுக்கான ஓய்வளிக்கும் தனி குஷன்களையும் கொண்டிருக்கின்றது. இத்துடன், கைகளுக்கான ஓய்வளிப்பான்களும் இதில் இருக்கின்றன. மேலும், பயணத்தை இனிமையானதாகவும், ரம்மியமானதாகவும் மாற்றுகின்ற வகையில் காரின் மேற்கூரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இரவில் வானம் எப்படி காட்சியளிக்குமோ அதுபோன்ற சிறப்பு மேற்கூரை அமைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்காக சிறப்பு எல்இடி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க நம்ப முடியாத வசதிகளை பென்ஸ் வி-கிளாஸ் பெற்றிருக்கின்றது.

இதனால், ஏற்கனவே சொகுசு வசதிகளைக் கொண்டிருந்த வி-கிளாஸ் கார் தற்போது மேலும் சொகுசு வசதிகளைத் தாங்கிய காராக மாறியிருக்கின்றது. ஆகையால், சொகுசு கார்களின் தலைவனாக இது மாறியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, கார் இரு அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, ஓட்டுநர் இருக்கும் பகுதியை தனிமைப் படுத்துகின்ற வகையில் இடையில் தடுப்பு நிறுவப்பட்டுள்ளது. இதில், ஸ்லைடிங் ஜன்னல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை எலெக்ட்ரானிக் பொத்தான் மூலம் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் ஓட்டுநருடன் பேச இதை விளக்கிக் கொள்ளலாம்.

மேலும், காருக்குள்ளேயே பேசிக் கொள்கின்ற வகையில் இன்டர்காம் வசதி தொலைபேசி வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் காரை நிறுத்தச் சொல்வதற்கு மற்றும் ஓட்டுனருடனான பிற தொடர்புகளுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், காரின் உட்பகுதியை மேலும் சிறப்பானதாக மாற்றுகின்ற வகையில் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.