Just In
- 29 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் தொடர்ந்து உச்சத்தில் மாருதி எர்டிகா!! ரூ.85 லட்சம் மதிப்புள்ள வெல்ஃபையரையும் 23பேர் வாங்கியுள்ளனர்
2020 நவம்பரில் அதிகளவில் விற்பனையான எம்பிவி கார்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்பிவி கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகளவில் இருக்காது என்பது உண்மைதான். ஏனெனில் கடந்த 2020 மாதத்தில் மொத்தமாகவே 26,667 யூனிட் எம்பிவி கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 25,884 எம்பிவி கார்கள் விற்கப்பட்ட 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் வெறும் 3 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.

இந்தியாவில் வழக்கம்போல் மாருதி சுஸுகியின் எர்டிகா எம்பிவி மாடல்தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020 நவம்பரில் 9,557 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இது 7,537 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2019 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் சுமார் 27 சதவீதம் அதிகமாகும்.

மாருதி எர்டிகாவை தொடர்ந்து 2020 நவம்பரில் அதிகளவில் விற்பனையான இரண்டாவது எம்பிவி மாடலாக மஹிந்திராவின் பொலிரோ உள்ளது. ஆனால் உண்மையில் பொலிரோ, எம்யூவி ரக காராகும். இந்த மஹிந்திரா தயாரிப்பு கடந்த மாதத்தில் 6,055 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காம்பெக்ட் சப்-4 மீட்டர் எம்பிவி மாடலான ரெனால்ட் ட்ரைபர், இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை சொந்தமாக்கியுள்ளது. 2019 நவம்பரில் 6,071 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த எம்பிவி கார் இந்த 2020 நவம்பரில் 21 சதவீதம் குறைவாக 4,809 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, இந்தியாவில் எர்டிகாவின் 6-இருக்கை ப்ரீமியம் வெர்சனாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கார் 2019 நவம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்துள்ளது.

அதாவது அந்த மாதத்தில் 2,195 மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த எம்பிவி காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 3,388 ஆகும். மாருதியின் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்கள் மட்டுமே மொத்த எம்பிவி கார் விற்பனையில் 48 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிடித்துள்ளது.

பிரபலமான எம்பிவி காராக இருந்தாலும், 2019 நவம்பர் உடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் குறைவான இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 நவம்பரில் 2,192 யூனிட்கள் இந்த எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இதன் விற்பனையை அதிகரிக்கும் என டொயோட்டா நம்பிக்கையுடன் உள்ளது.

இந்த லிஸ்ட்டில் இவற்றிற்கு அடுத்துள்ள கார்கள் எவையும் 500 யூனிட்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான கியா மோட்டார்ஸின் கார்னிவல் எம்பிவி கார் அதிகப்பட்சமாக 400 மாதிரிகள் கடந்த 2020 நவம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Rank | Model | Nov'20 | Nov'19 | Growth (%) |
1 | Maruti Ertiga | 9,557 | 7,537 | 27 |
2 | Mahindra Bolero | 6,055 | 5,127 | 18 |
3 | Renault Triber | 4,809 | 6,071 | -21 |
4 | Maruti XL6 | 3,388 | 2,195 | 54 |
5 | Toyota Innova Crysta | 2,192 | 3,414 | -36 |
6 | Kia Carnival | 400 | 0 | - |
7 | Mahindra Marazzo | 226 | 1,007 | -78 |
8 | Toyota Vellfire | 23 | 8 | 188 |
9 | Datsun Go+ | 17 | 115 | -85 |
10 | Mahindra Xylo | - | 87 | - |
11 | Tata Hexa | - | 126 | - |
12 | Honda BR-V | - | 151 | - |
13 | Renault Lodgy | - | 6 | - |
Source: Autopunditz.com

கார்னிவலுக்கு அடுத்த 7வது, 8வது மற்றும் 9வது இடங்களில் மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா வெல்ஃபையர், டட்சன் கோ+ உள்ளன. இவை முறையே 226, 23 மற்றும் 17 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்து வேறெந்த எம்பிவி காரும் சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.