இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 2020ம் ஆண்டு இதற்கு விதிவிலக்கு அல்ல. நடப்பாண்டு சப்-4 மீட்டர் காம்பேக்ட் செக்மெண்ட்டில் இருந்து ஃபுல் சைஸ் செக்மெண்ட் வரை, ஒவ்வொரு செக்மெண்ட்டிலும் ஏராளமான எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

2020ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யூவி கார்களை இந்த செய்தியில் திரும்பி பார்ப்பது சிறப்பாக இருக்கும். அனைத்து மாடல்களையும் குறிப்பிட முடியாது என்பதால், நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கியமான தயாரிப்புகளை மட்டும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

நிஸான் மேக்னைட்

இந்திய மார்க்கெட்டில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு வந்த எஸ்யூவி இது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிஸான் மேக்னைட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சவாலான விலையில் வந்துள்ளதால், இந்த புதிய எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. நிஸான் மேக்னைட் காரில் அட்டகாசமான வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், அதன் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியில், மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு இன்ஜின்களும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதுடன், நல்ல எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகின்றன. ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய எஸ்யூவி, நிஸான் நிறுவனத்திற்கு இந்தியாவில் புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

கியா சொனெட்

இந்திய சந்தையில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு பிரபலமான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி இது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவியை போலவே, கியா சொனெட் காரும் ஏராளமான வசதிகளுடன் வந்துள்ளது. அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில், இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

இந்திய சந்தையில் கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 என இந்த செக்மெண்ட்டின் மற்ற கார்களுக்கு கியா சொனெட் தற்போது தலைவலியாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

டொயோட்டா அர்பன் க்ரூஸர்

டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் இருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இரண்டாவது தயாரிப்பு இது. முதல் தயாரிப்பு க்ளான்சா. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர். எனினும் இரண்டு மாடல்களையும் வேறுபடுத்தும் விதத்தில் காரின் உள்ளேயும், வெளியேயும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை டொயோட்டா செய்துள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

புதிய தலைமுறை மஹிந்திரா தார்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவிகளில் ஒன்றாக மஹிந்திரா தார் இருந்து வருகிறது. இதன் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இயந்திர ரீதியாவும், டிசைன் ரீதியாகவும் ஏராளமான மாற்றங்களுடன் புதிய தலைமுறை தார் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணமாக, இந்த எஸ்யூவிக்கு காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதுதான் பெரிய குறையாக உள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் புதிய டிசைனில் புதிய தலைமுறை மாடல் வந்துள்ளது. அத்துடன் இன்டீரியரும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

விற்பனையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த கியா செல்டோஸின் விற்பனை, புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவின் வருகைக்கு பின் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிக்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா திகழ்கிறது. கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

எம்ஜி க்ளோஸ்ட்டர்

டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் உள்ளிட்ட எஸ்யூவிக்களுக்கு போட்டியாக எம்ஜி க்ளோஸ்ட்டர் களமிறங்கியுள்ளது. இந்திய சந்தையில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பி வழிகின்றன. எனவே பார்ச்சூனர் மற்றும் எண்டேவருக்கு விற்பனையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி

இந்திய சந்தையில் நடப்பாண்டு டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முக்கியமான கார்களில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் ஒன்று. ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த எஸ்யூவி கார்கள்... எல்லாமே சூப்பரா இருக்கு...

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலம் அடையாத நிலையில், தற்போது வரை 2,200க்கும் மேற்பட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து டாடா நிறுவனம் அசத்தியுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார்களுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

Most Read Articles

English summary
Best SUV Launches In India In 2020: From Kia Sonet To MG Gloster. Read in Tamil
Story first published: Saturday, December 19, 2020, 22:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X