பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரும் இந்த புதிய மாடல் குறித்த முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த அக்டோபர் மாதம் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கார் ஸ்போர்ட் லைன் 220 டீ (ரூ.39.3 லட்சம்), எம் ஸ்போர்ட் 220 டீ (ரூ.41.4 லட்சம்) என இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தனித்துவமான சிறப்பம்சங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலும் இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ 220 டீ எம் ஸ்போர்ட் எடிசன் மாடலுக்கு ரூ.42.3 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக 24 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் 7ந் தேதி முதல் shop.bmw.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் மாடலானது கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. இந்த கார் அல்பைன் ஒயிட் மற்றும் பிளாக் சஃபையர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காருக்கு விசேஷ கருப்பு வண்ண ஆக்சஸெரீகளுடன் பிஎம்டபிள்யூ எம் பெர்ஃபார்மென்ஸ் கார்களுக்கு உரிய கூடுதல் ஆக்சஸெரீகளையும் வழங்குகிறது. இந்த காரில் பிரத்யேக கருப்பு வண்ண பூச்சு கொண்ட க்ரில் அமைப்பு, எம் பெர்ஃபார்மென்ஸ் கார்களுக்கு உரிய ஆக்சஸெரீகளும் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கருப்பு வண்ண மிரர் கவர்கள், விசேஷ ரியர் ஸ்பாய்லர், விசேஷ கருப்பு க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி, 18 அங்குல ஒய் வடிவிலான 554 எம் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் என அசத்துகிறது. இந்த காரின் இன்டீரியரில் அதிக மாற்றங்கள் இல்லை.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் மெமரி வசதியுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் 40/20/40 என்ற வகையில் மடக்கக்கூடிய பின் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், முப்பரிமாண வரைபடத்துடன் நேவிகேஷன் வசதி, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல கட்டுப்பாட்டு திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

குரல் வழி கட்டுப்பாட்டு வசதி, கையசை மூலமாக 6 விதமான விஷயங்களை கட்டுப்படுத்தும் வசதி ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்கலாக இருக்கும். வயர்லெஸ் சார்ஜர், நெருக்கமான பகுதிகளில் எளிதாக பார்க்கிங் செய்ய உதவும் வகையிலான ரியர் வியூ கேமரா, வயர்லெஸ் முறையில் ஆப்பிள் கார் ப்ளே செயலியை இணைக்கும் வசதி, ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பக்கவாட்டு மோதல்களிலிருந்து பயணிகளை காக்கும் சிறப்பு கட்டமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் மாடலில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஈக்கோ, புரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவிங் மோடுகள் உள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் மாடலானது எம் ஸ்போர்ட் 220டீ மாடலைவிட ரூ.90,000 மட்டுமே கூடுதல் விலை கொண்டதாக இருக்கிறது. இது தனித்துவான அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் மாடலாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும்.

Most Read Articles

English summary
BMW has launched new 2 Series Black Shadow Edition In India priced at Rs.42.30 lakh (Ex-showroom).
Story first published: Thursday, December 3, 2020, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X