பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

இந்தியாவில் விற்பனையாகும் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடல்களில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. கடுமையான சந்தைப் போட்டி உள்ள இந்த சொகுசு கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும், தேர்வையும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் வழங்குகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் வித்ததில், டீசல் மாடலின் விலை குறைவான புதிய வேரியண்ட் தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

பிஎம்டபிள்யூ 320டீ ஸ்போர்ட் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் வழங்கப்படும் 330ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டில் வழங்கப்படும் அதே வசதிகள், சிறப்பம்சங்கள் இந்த 320டீ ஸ்போர்ட் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ 330ஐ ஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் எம் ஸ்போர்ட் மாடலில் வழங்கப்படும் சிறப்பு வாய்ந்த ஸ்டீயரிங் சிஸ்டம் உள்ளது. ஆனால், டீசல் மாடலில் அது கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

இந்த புதிய டீசல் வேரியண்ட்டில் லான்ச் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், மெமரி வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை, சன்ரூஃப், 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

அதேவேளையில், ஆப்பிள் கார் ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், உயர் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸடம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங் தொழில்நுட்பம் ஆகியவை இல்லை. இவை 320டீ லக்சுரி லைன் வேரியண்ட்டில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டிவிடும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான இந்த டீசல் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ோல், ரியர் வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் புதிய 320டீ ஸ்போர்ட் வேரியண்ட்டிற்கு ரூ.42.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் 330ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டைவிட ரூ.40,000 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்

அதேநேரத்தில், இதுவரை விலை குறைவான டீசல் வேரியண்ட் தேர்வாக இருந்த 320டீ லக்சுரி லைன் வேரியண்ட்டைவிட ரூ.5 லட்சம் விலை குறைவான தேர்வாக 320டீ ஸ்போர்ட் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ, ஆடி ஏ4 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
BMW has launched 320d sport diesel variant in India and priced at Rs.42.10 lakh (Ex-Showroom).
Story first published: Wednesday, August 5, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X